ஐபிஎல் மெகா ஏலத்தில் காத்திருக்கும் 5 அதிர்ச்சிகள்... ரோஹித் சர்மா முதல் டூ பிளெசிஸ் வரை!

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த 5 வீரர்கள் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். அவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம். 

  • Sep 24, 2024, 16:19 PM IST

IPL 2025 Mega Auction: ஐபிஎல் மெகா ஏலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த ஏலத்தில் பல அணிகள் 4-5 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்திற்கு விடுவிக்கும். இதனால், அனைத்து அணிகளும் புது பொலிவு பெறும். அந்த வகையில், 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது.

1 /8

ஐபிஎல் ஏலம் என்றாலே சர்ப்ரைஸ்கள் இல்லாமல் இருக்காது. யாருமே எதிர்பார்க்காத வீரர் பல கோடிகளுக்கு ஏலம் போவார். எதிர்பார்க்காத ஒரு அணி சம்பந்தமே இல்லாமல் ஒரு வீரரை பெரிய தொகைக்கு எடுக்கும். இப்படி பல சர்ப்ரைஸ்கள் ஐபிஎல் ஏலத்தில் இருக்கும்.   

2 /8

மினி ஏலத்திலேயே இத்தனை சர்ப்ரைஸ்கள் வரும் என்றால் மெகா ஏலத்தை சொல்லவா வேண்டும். அதுவும் வர உள்ள 2025 ஐபிஎல் மெகா ஏலம் பெரிய சர்ப்ரைஸ்களை பதுக்கி வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.   

3 /8

அந்த வகையில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அனைத்து ரசிகர்களையும், வீரர்களையும், வல்லுநர்களை அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்த உள்ள இந்த 5 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.   

4 /8

வெங்கடேஷ் ஐயர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உருவாக்கிய ஒரு ஆல்-ரவுண்டர், வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer). 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் தக்கவைக்கப்பட்டவர். கடந்த முறை கோப்பையை வெல்ல வெங்கடேஷ் ஐயரின் அளப்பரியது. அப்படி இருந்தாலும் இந்த முறை அவரை கேகேஆர் அணியால் தக்கவைக்க முடியாது. எனவே அவரை கேகேஆர் விடுவிக்கும் என்பதால் ஏலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.   

5 /8

கிளென் மேக்ஸ்வெல்: ஆர்சிபி அணியின் தூணாக இருக்கும் மேக்ஸ்வெல்லை இந்த முறை அந்த அணி தக்கவைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. போதிய பெர்ஃபாம்ன்ஸ் இல்லையென்பதால் இவரை விடுவிக்கவே அதிக வாய்ப்புள்ளது. இவரை விடுவித்தால் பெரும் அதிர்ச்சி ஏற்படும்.   

6 /8

ஃபாஃப் டூ பிளெசிஸ்: அப்படி மேக்ஸ்வெல்லை (Glenn Maxwell) தக்கவைக்க வேண்டும் என்றால் டூ பிளெசிஸை தக்கவைக்கவே இயலாது. இவரின் கேப்டன்ஸி நன்றாக இருந்தாலும் பேட்டிங் போதுமான அளவுக்கு இல்லை. எனவே, இவரை விடுவித்தால் ஏலத்தில் பெரும் அதிர்ச்சியாக அமையும்.   

7 /8

கேஎல் ராகுல்: கடந்த முறை அணி உரிமையாளருடன் காரசாரமான பேச்சு மைதானத்திலேயே நடந்தது. இதனால் கேஎல் ராகுல் (KL Rahul) தக்கவைக்கப்படுவாரா என்ற கேள்வி இருந்தது. இருப்பினும் சில மாதங்களுக்கு முன் சஞ்சீவ் கொனேகாவும், கேஎல் ராகுலும் சந்திப்பு மேற்கொண்டனர். இதனால் ராகுல் மீண்டும் எல்எஸ்ஜி கேப்டன் ஆவார் என கூறப்பட்டது. இருப்பினும் இவரை விடுவித்து ஏலத்தில் வேறொருவரை எடுத்தால் அது அதிர்ச்சியளிக்கும்.   

8 /8

ரோஹித் சர்மா: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிடம் (Rohit Sharma) இருந்து கடந்த முறை கேப்டன்ஸி பறிக்கப்பட்டது. இந்த முறை அவரை தக்கவைக்குமா வைக்காதா என கேள்வி எழுந்துள்ள நிலையில், அவரை ஏலத்திற்கு விடுவித்தால் பெரும் அதிர்ச்சியாக அமையும். பெரும்பாலும் ரோஹித் சர்மா வேறு அணிக்கு டிரேட் செய்யப்படலாம்.