நாம் உண்ணும் ஒவ்வொரு உணவு வகையும் நம் உடலுக்கு தேவையான ஏதாவது ஒரு சத்தை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள் என அனைத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு, ஆனால், சிலாவற்றை அளவிற்கு மீறி உண்பதால் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
அவ்வகையில், பருப்பு வகைகள் பற்றிய சில முக்கிய விஷயங்களை இன்று பார்க்கலாம். பருப்பு வகைகளில் ஏராளமான புரதங்கள் உள்ளன. இதை சாப்பிடுவதனால் உடலில் ஆற்றல் அதிகரிக்கிறது.
வளரும் குழந்தைகளுக்கு பருப்பு மிகவும் அத்தியாவசியமானது. உடல் உருப்புகளின் திடமான உருவாக்கத்திலும், அதற்கு தேவையான புரதங்களை உருவாக்குவதிலும் பருப்பு வகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இருப்பினும், அதிக அளவில் பருப்பு வகைகளை சாப்பிடுவதால் சில குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
பருப்பால் உடல் நலக் குறைபாடா என நீங்கள் அச்சரியப்படலாம். குறிப்பிட்ட அளவை விட அதிகமாக பருப்பை உட்கொள்வதால் வரும் தீங்குகளைப் பற்றி இங்கே காணலாம். நீங்கள் அதிக அளவில் பருப்பு வகைகளை உட்கொண்டால், அது உங்கள் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கிறது. இதனால் உங்கள் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்ப்பதால், வாயு பிரச்சனையும் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல், உணவில் பருப்பின் அளவு அதிகமானால் வயிறு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதிக பருப்பு வகைகளை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள நச்சுகள் வெளியே வராமல் போய்விடுகின்றன. இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒரு விஷயமாகும்.
பருப்பு வகைகளை சாப்பிடுவதால் பல நன்மைகளும் உள்ளன. பயத்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்பை கலந்து சாப்பிட்டால், உடல் நலனும் வயிறும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த இரண்டு பருப்பு வகைகளின் கலவையை நீங்கள் எந்த பருவத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். கோடையில் குளிர்ச்சியான பதார்த்தங்களை சாப்பிடுவது நல்லது. அதேபோல் குளிர்காலத்தில் சூடான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினால், பருவத்திற்கு ஏற்ப பருப்பு வகைகளையும் நீங்கள் பிரித்து சாப்பிடலாம்.