வக்ரமடையும் குரு: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்

Jupiter Retrograde: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் அவற்றின் வக்ர பெயர்ச்சி 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. தற்போது குரு வக்ர பெயர்ச்சி அடையப்போகிறது. இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குரு வக்ரி பெயர்ச்சி 2023: சில நாட்களுக்கு முன்பு, சனி கிரகம் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார், அதன் பிறகு இப்போது குரு மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். விழாயன் கிரகம் செழிப்பு, பெருமை, செல்வம், ஆன்மீகம் மற்றும் வழிபாடு போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், வியாழனின் இயக்கத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையே பாதிக்கப்படுகிறது.

1 /7

கிரகங்களின் சுற்றும் வேகம் அடிப்படையில் ஒவ்வொரு வக்ர கதிக்கான காலமும் குறிப்பிடப்படுகிறது. வக்ர கதி நிலை அடையும் போது ஒரு கிரகம் தான் கொடுக்க வேண்டிய பலனுக்கு அப்படியே எதிராக கொடுக்க நேரிடும்.

2 /7

குரு வக்ர பெயர்ச்சி 2023: 2023ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி காலை 9.15 மணிக்கு குரு மேஷ ராசியிலேயே அதிசார பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார். பின் டிசம்பர் 31ம் தேதி மீண்டும் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்கதி பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார்.

3 /7

மேஷம்: இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறலாம். இந்த நேரத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன் போது வேலை தேடும் இளைஞர்களும் சுப பலன்களைப் பெறுவார்கள். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு வெளிநாட்டு பயணம் செல்லலாம், இது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

4 /7

ரிஷபம்: வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். கூட்டு தொழில் தொழில் வளர்ச்சி அடையும் வியாபார விஸ்தரிப்பு வெளிநாட்டு பயணம் ஏற்படும் நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும்.  

5 /7

மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் லாபம் இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு நிலைத்திருக்கும். இதுமட்டுமின்றி, உங்கள் மனைவியுடன் சேர்ந்து புதிய சொத்து போன்றவற்றை வாங்கலாம். ஷேர் மார்க்கெட், பந்தயம் போன்றவற்றில் முதலீடு செய்பவர்களும் ஆதாயம் அடைவார்கள்.

6 /7

கடகம்: கடக ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல விளைவை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். மறுபுறம், இந்த காலகட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவியும் கௌரவமும் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.