Largest Office Building In India: உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையமாக கருதப்படும் சூரத் வைர வர்த்தக நிலையம், பெண்டகன் கட்டடத்தை சிறியதாக்கிவிட்டது
35 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள சூரத் டயமண்ட் போர்ஸ் 15-அடுக்கு வளாகமாகும், இது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒன்பது செவ்வக கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.
சூரத்தின் கஜோத் பகுதியில் அமைந்துள்ள டயமண்ட் போர்ஸ் நவம்பர் 21ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும். உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையமாக கருதப்படும் சூரத் வைர வர்த்தக நிலையத்தை நவம்பர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
உலகின் மிகப் பெரிய கட்டடங்கள் என்ற பட்டியலில் பெண்டகனை பின்னுக்குத் தள்ளிய சூரத் டையமண்ட் போர்ஸ்
இதன் மூலம் சூரத் வைரம் உலகம் முழுவதும் வித்தியாசமான அடையாளத்தைப் பெறும்
பிரமமாண்டமான கட்டுமானத்தின் இண்டீரியர்
டைமண்ட் பர்ஸில் அலுவலகங்களை முன்பதிவு செய்துள்ள சுமார் 350 வைர வியாபாரிகள் நவம்பர் 21 ஆம் தேதிக்குப் பிறகு தங்கள் அலுவலகங்களைத் திறப்பதாக அறிவித்துள்ளனர்.
, சூரத் டயமண்ட் போர்ஸ் உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக மையம், இது கூட்டுறவு அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் 1000க்கும் மேற்பட்ட டயமண்ட் போர்ஸ் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் இணைந்து தங்கள் அலுவலகங்களை திறப்பார்கள், இது உலக சாதனையாக இருக்கும்
இந்திய கட்டிடக்கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் இந்த பிரம்மாண்ட வைர வர்த்தக மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டிடத்தை, 7.1 மில்லியன் சதுர அடியில் கட்டியுள்ளது