வருமான வரி தாக்கல்... ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க... சிக்கல் ஏற்படும்..!!

வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்குகிறது. ஜூலை 31 ஆம் தேதிக்குள் ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் மற்றும் வரிக்கு வட்டி செலுத்த வேண்டும்.

நீங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது நிகழும் பொதுவான தவறுகள் நடக்காமல் கவனமாக இருப்பதால், பல சிக்கல்களை தவிர்க்கலாம். எனவே இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளவது நன்மை பயக்கும்.

1 /8

வருமான வரி தாக்கல்: வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலகெடு  ஜூலை 31ம் தேதி என்று இருக்கும் நிலையில்,  வரி செலுத்துவோர் ஜூலை 31க்கு முன் ரிட்டர்ன் தாக்கல் செய்வது பல வழிகளில்  நன்மை பயக்கும்.

2 /8

வருமான வரி தாக்கல் செய்வோருக்கான டிப்ஸ்: வரி செலுத்துவோர் ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது பொதுவாக நடக்கும் தவறுகளை தவிர்க்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர்கள் எந்த விதமான பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது.

3 /8

ஐடிஆர் தாக்கல் செய்வதில் மிகப்பெரிய தவறு தனிப்பட்ட தகவல்களை வழங்குவதில் உள்ளது. இதுவரை பல தகவல்கள் ஐடிஆர் படிவத்தில் நிரப்பப்பட வேண்டும். அதில் ஒன்று மதிப்பீட்டு ஆண்டை வரி செலுத்துவோர் தேர்வு செய்ய வேண்டும். தவறான மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுப்பது சிக்கல்களை ஏற்படுத்தும். இது தவிர, நிரப்பப்பட்ட தகவல்களை நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பது முக்கியம். ஏதேனும் தகவல் தவறாக இருந்தால், உங்கள் ரிட்டர்ன் நிராகரிக்கப்படலாம்.

4 /8

வரி செலுத்துவோர் சரியான ஐடிஆர் படிவத்தை தேர்வு செய்ய வேண்டும். வருமான வரித்துறை பல்வேறு வகையான ஐடிஆர் படிவங்களைக் கொண்டுள்ளது. வரி செலுத்துவோர் தனக்கென சரியான ITR படிவத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். வரி செலுத்துவோர் இதில் சிரமத்தை எதிர்கொண்டால், அவர் ஒரு நிபுணரிடம் உதவி பெறலாம். 

5 /8

பல வரி செலுத்துவோர் தங்களின் முக்கிய வருமான ஆதாரம் பற்றிய தகவல்களை அளிக்கின்றனர். ஆனால், சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கான வட்டி, வாடகை வருமானம் போன்ற தகவல்களை வழங்க மறந்து விடுகின்றனர். வரி செலுத்துவோர் தங்களுக்கு கிடைக்கும் அனைத்து வகை வருமானத்தையும் அறிவிப்பது முக்கியம்.  

6 /8

வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பிறகு, அதை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உங்கள் வருமானம் வருமான வரி அதிகாரிகளால் பரிசீலிக்கப்படாது. உங்கள் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும். எனவே, ரிட்டனைத் தாக்கல் செய்யும் போது அதைச் சரிபார்ப்பது நல்லது. நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால், சரிபார்க்க மறந்துவிடலாம்.

7 /8

படிவம் 26AS-ல் வரி செலுத்துவோரின் TDS மற்றும் TCS பற்றிய தகவல்கள் இருக்கும். இவற்றை உங்கள் சொந்த பதிவுகளுடன் பொருத்துவது முக்கியம். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உங்கள் வரிக் கணக்கீட்டில் பிழை இருக்கலாம். நீங்கள் சம்பளம் பெறும் வரி செலுத்துபவராக இருந்தால், படிவம் 16  தரவையும் படிவம் 26AS  தரவையும் கண்டிப்பாகப் பொருத்தி பார்க்க வேண்டும்.  

8 /8

வெளிநாட்டில் உங்களுக்கு சொத்து அல்லது வருமானம் இருந்தால், அதை ஐடிஆர் படிவத்தில் குறிப்பிட மறக்காதீர்கள். பலர் வெளிநாட்டில் வேலை செய்யும் போது சொத்து அல்லது வீடு வாங்குகிறார்கள். இதனை, பதிவில் குறிப்பிட வேண்டியது அவசியம். இதைச் செய்யாவிட்டால், வருமான வரித் துறை உங்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கலாம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.