உடலை ஆழமாக சுத்தம் செய்ய..‘இந்த’ 7 பானங்களை அருந்துங்கள்!

Healthy Drinks: நம் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற சில இயற்கை பானங்களை நாம் குடிக்க வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?

Healthy Drinks: உடலில் இருக்கும் நச்சுகளால் நமக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவை வரலாம். இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அது பெரிய பிரச்சனையிலும் கொண்டு சென்று விட்டுவிடலாம். எனவே, இதை சரிசெய்ய நமது உணவோடு சேர்த்து சில இயற்கை பானங்களையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை குடிப்பதால் நமது வயிறு சுத்தமாவது மட்டுமன்றி, நோய் கிருமிகளும் நம் உடலில் அண்டாமல் தடுக்கலாம். அவை என்னென்ன இயற்கை பானங்கள் தெரியுமா?

1 /8

உடலை சுத்திகரிக்க, நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மட்டுமன்றி அதனுடன் சேர்த்து சில இயற்கை பானங்களையும் அருந்த வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?

2 /8

மஞ்சள் டீ: இந்த மஞ்சள் தேனீரில், முழுக்க முழுக்க பல மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் அழற்சி ஏற்படாமல் தடுக்குமாம். இதனால், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் எதுவும் வராமல் தவிர்க்கலாம். 

3 /8

பாகற்காய் சாறு: பாகற்காய் சாறு ஹெல்தியான பானமாக இருந்தாலும் உடலை சுத்தம் செய்யும் சூப்பரான பானம் ஆகும் இதில், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்திருக்கிறது. உடலில் கலக்கும் ரத்த சர்க்கரை அளவை குறைக்க, நுரையீரலை சரிசெய்ய, ஒட்டுமொத்த செரிமானத்தை பாதுகாக்க என இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

4 /8

கிரீன் டீ: கிரீன் டீயில் உடலை சுத்திகரிக்கும் ஆண்டி ஆக்சிடன்ஸ்கள் இருக்கின்றன. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் ஒரு மருத்துவ ஆய்வில் இது, கல்லீரல் பாதிப்பை தவிர்க்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

5 /8

எலுமிச்சை இஞ்சி சாறு: எலுமிச்சையிலும், இஞ்சியிலும் உடலில் இருக்கும் நோய் பாதிப்பு பாக்டீரியாக்களை வெளியே தள்ளும் சத்து இருக்கிறது. இஞ்சி, செரிமான கோளாறை சரி செய்ய, அத்துடன் சேரும் இஞ்சியில், வைட்டமின் சி சத்து இருக்கிறது. இதை குடித்தால் வயிறு நல்ல முறையில் சுத்தமாக இருக்கும் என்பது சில மருத்துவ அறிக்கைகளின் கூற்றாகும். 

6 /8

இளநீர்: சம்மரில் பலருக்கு அருமருந்தாக விளங்கும் இயற்கை பானங்களுள் ஒன்று, இளநீர். குடல் இயக்கத்தை அதிகரித்து, உடலுக்கு தேவையான சத்துகளான பொட்டாசியம் மற்றும் மாக்னீசியம் ஆகிய சத்துகளை இது கிடைக்க செய்கிறது. அனைவரும் தினமும் ஒரு டம்ளர் இளநீர் குடித்தால், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகுமாம்.

7 /8

நெல்லிக்காய் சாறு: நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து இருக்கிறது. இது, கல்லீரலை சுத்திகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. அது மட்டுமன்றி, கல்லீரலின் பாதிக்கப்பட்ட செல்களையும் இது சரிசெய்யுமாம். எனவே, இந்த பானத்துடன் உங்கள் நாளை ஆரம்பிக்கலாம். 

8 /8

ஓமம் கலந்த நீர்: அனைத்து இந்திய இல்லங்களின் சமையல் அறையிலும் இருக்கும் பொருள் இது. ஓமத்தை, பலரும் செரிமான கோளாறை சரி செய்ய உபயோகிப்பர். இது, வயிறு உப்பசம் ஆவதை தவிர்ப்பதுடன், உடலில் இருக்கும் நச்சுகளையும் வெளியேற்றுகிறது.  (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE Media இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)