சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், புத்தாண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்

Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sani Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. கிரகங்களில், நீதி தேவனாக கருதப்படும் சனி பகவான் மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஒவ்வொரு கிரகத்திலும் அதிக நாட்களுக்கு இருப்பதால், கிரகங்களில் அவரது தாக்கமும் அதிகமாக உள்ளது. மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருப்பினும், சிலருக்கு இது பொற்காலமாய் ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

1 /10

மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். இவர் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆவார்.

2 /10

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். சனி பகவானின் பரிபூரண அருள் கிட்டும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

3 /10

ரிஷபம்: சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும். 2025 ஆம் ஆண்டில், ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். வேலை தேடிக்கொண்டு இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

4 /10

கடகம்: சனி பெயர்ச்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். நிதி நிலை வலுவடையும். புதிய வருடம் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக அமையும்.

5 /10

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் ஆரம்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி தசையிலிருந்து விடுதலை கிடைக்கும். சனி தசையின் தாக்கம் குறைவதால், விருச்சிக ராசிக்காரர்கள் எதிர்நோக்கும் தொல்லைகள் அனைத்தும் நீங்கும்.  

6 /10

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை மேம்படும். பல நாட்களாக இருந்து வந்த நிதி நெருக்கடிக்கு இப்போது நிவாரணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

7 /10

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் குடும்ப உறவுகள் மேம்படும், குறிப்பாக உடன்பிறந்தவர்களுடன் உறவு நன்றாக இருக்கும். குழந்தைகளால் மனம் மகிழும். குடும்பத்தில் மகிழ்ச்சியிம் அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பல வித வெற்றிகளை காண்பீர்கள்.

8 /10

சனி பகவான் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவர். ஏழை எளியவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை அவ்வப்போது தானம் செய்து உதவும் நபர்களை அவர் எப்போதும் சோதிப்பது இல்லை. நம் செயலும் எண்ணமும் சீராக இருந்தால், அவர் அருள் நமக்கு நிச்சயம் கிட்டும்.

9 /10

சனி பகவானின் அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் கூறலாம். இது தவிர, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும்.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.