மீண்டும் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் டிஏ ஹைக், ஊதிய உயர்வு

7th Pay Commission: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. இதன் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நிதி பலனைப் பெறுவார்கள்.

7th Pay Commission: தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளின் படி பார்த்தால், AICPI இன்டெக்ஸ் 141.5 ஐ எட்டியுள்ளது. மேலும் அகவிலைப்படி மதிப்பெண் 54.49% ஐ எட்டியுள்ளது. இருப்பினும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இதற்குப் பிறகுதான டிஏ உயர்வு குறித்து முடிவு செய்யப்படும். டிசம்பர் 2024க்குள் குறியீட்டு எண் 144-145 புள்ளிகளை அடைந்து, DA மதிப்பெண் 55% க்கும் அதிகமாக இருந்தால், டிஏ -வில் 3 சதவீதம் அதிகரிப்பு இருக்கும். ஆனால், இறுதி முடிவை மத்திய அரசுதான் எடுக்கும்.

1 /11

7வது ஊதியக் குழு: சுமார் ஒரு கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. புதிய ஆண்டில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப் போகிறது. ஜனவரி 2025 -இல் அகவிலைப்படி எவளவு அதிகரிக்கும்? சம்பளம் எவ்வளவு உயரும்? இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

2 /11

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. இதன் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நிதி பலனைப் பெறுவார்கள். இந்த உயர்வு 7வது ஊதியக்குழுவின் கீழ் செய்யப்படும்.

3 /11

தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான தரவுகளின் படி பார்த்தால், AICPI இன்டெக்ஸ் 141.5 ஐ எட்டியுள்ளது. மேலும் அகவிலைப்படி மதிப்பெண் 54.49% ஐ எட்டியுள்ளது. இருப்பினும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இதற்குப் பிறகுதான டிஏ உயர்வு குறித்து முடிவு செய்யப்படும். டிசம்பர் 2024க்குள் குறியீட்டு எண் 144-145 புள்ளிகளை அடைந்து, DA மதிப்பெண் 55% க்கும் அதிகமாக இருந்தால், டிஏ -வில் 3 சதவீதம் அதிகரிப்பு இருக்கும். ஆனால், இறுதி முடிவை மத்திய அரசுதான் எடுக்கும்.

4 /11

உண்மையில், மத்திய அரசு மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) ஆண்டுக்கு இரண்டு முறை திருத்துகிறது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. இந்த அதிகரிப்பு ஜனவரி/ஜூலை முதல் நடைமுறைக்கு வருகிறது.

5 /11

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 3% உயர்ந்தது. அதன் அடிபப்டையில் தற்போடு டிஏ மற்றும் டிஆர் 53% ஆக உள்ளன.

6 /11

முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிபப்டையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.

7 /11

அந்த வகையில், ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படும். இதுவரையிலான தரவுகளைப் பார்த்தால், புதிய ஆண்டில் டிஏ மீண்டும் 3% அதிகரிக்கலாம் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2025 -இல் வரக்கூடும்.

8 /11

சம்பள உயர்வு: ஊழியர்களின் அடிப்படை ஊதியம் (Basic Salary) ரூ.18,000 ஆகவும், அகவிலைப்படி 56% ஆகவும் இருந்தால், கணக்கீடு இப்படி இருக்கும்: ஜனவரி 2025 முதலான டிஏ: ரூ.18,000 x 56% = ரூ.10,080/மாதம் / ஜூலை 2024 வரையிலான டிஏ: ரூ.18,000 x 53% = ரூ.9,540/மாதம். 3% அதிகரிப்புக்குப் பிறகு சம்பளத்தில் காணப்படக்கூடிய மாற்றம் - மாதத்திற்கு ரூ.540.

9 /11

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ மற்றும் டிஆர் வழங்கப்படுகின்றன. இது ஊழியர்களின் ஊதியத்தில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது.

10 /11

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA% = [(கடந்த 12 மாதங்களில் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100)  – 115.76)/115.76] x 100. பொதுத்துறை ஊழியர்களுக்கு DA% = [(கடந்த 3 மாதங்களில் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33)/126.33] x 100

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.