ஓரல் செக்ஸ் வன்கொடுமை: குஜராத் ஐகோர்ட்

கணவன் மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொள்ளுதல் பலாத்காரமாகாது ஆனால் இயற்கைக்கு மாறாக ஓரல் செக்ஸ் வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தினால் அது வன்கொடுமையாகும் என குஜராத் கோர்ட் தெரிவித்துள்ளது.

Last Updated : Apr 3, 2018, 11:25 AM IST
ஓரல் செக்ஸ் வன்கொடுமை: குஜராத் ஐகோர்ட்  title=

கணவன் மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொள்ளுதல் பலாத்காரமாகாது ஆனால் இயற்கைக்கு மாறாக ஓரல் செக்ஸ் வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தினால் அது வன்கொடுமையாகும் என குஜராத் கோர்ட் தெரிவித்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தனது கணவருக்கு எதிராக உடல்ரீதியான துன்புறத்தல் குக்ரித்து புகார் அளித்திருந்தார். அந்த மனுவில், தனது கணவர் தன்னை வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்ததோடு விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறாகவும் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறும் துன்புறுத்துவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரது மனைவியின் இந்த குற்றச்சாட்டை மறுத்த கணவர் குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நிதிபதி 18 வயதுக்கு உட்பட்ட மனைவியுடன் கட்டாய உடலுறவு கொள்வதே பலாத்காரமாகும், 18 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் கணவர் கட்டாயமாக உடலுறவு கொள்வது பலாத்காரமாகாது எனவும் இயற்கைக்கு மாறாகவும் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறும் துன்புறுத்துவது கடும் குற்றச்செயல் என நீதிபதி தெரிவித்தார்.

 

Trending News