ஒடிசாவில் பாலத்திற்கு அடியில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
ஒடிசா மாநிலத்தில் பெண் ஒருவர் பாலத்திற்கு அடியில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவல் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு யானைகள் கூட்டம் தரைமட்டமாகியது.
இதனால் அவர் வீடு இல்லாமல் பாலத்திற்கு அடியில் வசித்து வந்தார். தனக்கு நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த அந்த பெண் அவர் தங்கியிருந்த பாலத்திற்கு அடியிலேயேகுழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இது தொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து, அந்த பெண்ணுக்கு உதவி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றி ஜிலா பரிஷத் உறுப்பினர் கூறுகையில், எந்தவித உதவியும் அளிக்கப்படாததால் தான் இத்தகைய அவலம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
#Odisha: Woman delivers baby in culvert after her house was destroyed by an elephant 6 months ago in Mayurbhanj's Surubil village. Zila Parishad Member says, 'No aid or rehabilitation has been given.' Addn'l District Magistrate says, 'Will look into it, culprits will be punished' pic.twitter.com/TjrGW2p1rd
— ANI (@ANI) May 8, 2018