இந்திய நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெருந்தோட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பார்வையிடுவதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை தங்கமலை தோட்டத்திற்கு சென்று, அங்கு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார்.
இது தொடர்பான நிகழ்வினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஏற்பாடு செய்திருந்தார். பொன்னாடை போற்றி மாலை அணிவித்து உற்சாகத்துடன் அண்ணாமலை அவர்களை வரவேற்றது குறிப்பிடத்தக்கது. அப்போது குத்துவிளக்கேற்றிய பின்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார்.
இந்திய நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு மரியாதை செலுத்திய பின்னர் அந்த உருவப்படங்கள் தமக்கு வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
மேலும் படிக்க | இந்தியா உலகில் 5வது பெரிய பொருளாதார பலமுடைய நாடாக மாறியுள்ளது: அண்ணாமலை
முன்னதாக யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) காலை விஜயம் செய்த பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலுக்கு விஜயம் செய்துள்ளார்.
இன்று காலை 9 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற அவரை, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்று ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
ஆலய வழிபாட்டிற்கு பின்னர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இலங்கை விவகாரம்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR