பல்வேறு நெருக்கடிகளால் தங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்திய இழுவை படகுகள், மீண்டும் முல்லைத்தீவு கடற்பரப்பில் வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்டு உள்ளது தமக்கு இன்னும் பெரிய துன்பத்தை தந்துள்ளதாக முல்லைத்தீவு மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட காலமாக இந்தியா இழுவை படகுகளின் ஆக்கிரமிப்பு குறைவாக இருந்த நிலையில் சட்டவிரோத தொழில்களினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலைமையில் முல்லைதீவு மீனவர்கள், எரிபொருள் இன்மை காரணமாகவும், தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து தொழிலுக்கு செல்ல முடியாத இக்கட்டான நிலைமையை எதிர்கொண்டிருந்தனர்,
இவ்வாறான பின்னணியில் இன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்கரையிலிருந்து பார்க்கின்றபோது தெரியக் கூடிய அளவில் சுமார் 20 க்கும் மேற்பட்ட இந்திய இழுவை மடி படகுகள் வருகை தந்து கடல் தொழிலில் ஈடுபட்டிருந்தது.
மேலும் படிக்க | இலங்கைக்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை வழங்குவோம்: உறுதியளித்த இந்திய குழு
நிலைமையை கண்காணித்த கடல்த்தொழில் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் காண்பித்தனர். அப்போது முல்லைதீவு கடலில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் பகுதியிலே 20 க்கும் மேற்பட்ட இழுவை மடி படகுகள் வருகை தந்து கடலில் இழுவை மடிகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வந்ததை காண முடிந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு மத்தியில் 30 வருட யுத்தத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த மக்கள் தற்போது மீண்டும் தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக மீனவர்களைப் பொறுத்தளவில் மண்ணெண்ணெய் இல்லாமையால் தொழிலுக்கு செல்ல முடியாத நிலைமையில், உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்ற நிலைமையில் தென்னிலங்கை மீனவர்களுடைய வருகையும், முல்லைத்தீவு கடலிலே செய்யப்படுகின்ற சட்டவிரோதமாக குறிப்பாக சுருக்கு வலை தொழில் லைட்கோஸ் டைனமட் போன்ற சட்டவிரோத தொழில்களும், மிக பெரிய அளவிலே பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலைமையில் இன்று இந்திய இழுவைப்படகுகளும் மீண்டும் வருகை தந்திருக்கின்றன. முல்லைத்தீவு மீனவர்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்பபடுத்தியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் ஊடகவியலாளர்களை அழைத்து சென்ற படகில் வந்த மீனவர்கள் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், இந்த மோசமான நிலைமையில், நீங்களும் தொழிலை செய்து எங்களுடைய வாழ்வாதாரத்தையும் அழித்தால் நாங்கள் எப்படி வாழ்வது என்பதையும், எனவே எங்களுடைய கடற் பகுதிக்கு வந்து தொழில் செய்ய வேண்டாம் என்பதையும் குறித்த இந்திய மீனவர்களுக்கு தெரிவித்து இருந்தனர். அதற்கு இந்திய மீனவர்கள் அந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்டு தாங்கள் இனி இங்கு வரவில்லை என்று தெரிவித்து சென்று இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது
இருப்பினும் சட்டவிரோத தொழில்கள் மற்றும் இவ்வாறான இந்திய இழுவைப்படகுகள் அச்சுறுத்தல்கள் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் முற்றுமுழுதாக பாதிப்படைந்து இருப்பதாகவும் இன்னும் ஒரு தடவை இந்த இந்திய இழுவைப்படகுகள் முல்லைத்தீவு கடற்கரை நோக்கி வந்தால் அந்த படகை கரைக்கு தாங்களாகவே கொண்டு வருவோம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
மேலும் படிக்க | தமிழகம் ஊடுருவ முயலும் முன்னாள் விடுதலைப்புலிகள்: வெளியான உளவு தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR