NRI Voting Rights: வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் இந்தியர்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கியிருக்கிறது. இலங்கையின் தொண்டியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் சார்பில் வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க வலியுறுத்தி உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் இந்திரலிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதி இடம் வழங்கும் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தியும் உலகம் முழுவதும் உள்ள எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து வாழ்ந்து வரும் இந்தியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
மேலும் படிக்க | சிட்டாய் பறக்கும் பூச்சிக்கு நோவக் ஜோகோவிச் என பெயர்: செர்பியா
வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் சார்பில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் இந்தியர்களிடம் கையெழுத்து பெற்று இலங்கை ஜனாதிபதியிடம் நேரடியாக வழங்கும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், முதல்கட்டமாக தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. அதனை அடுத்து, பல்வேறு மாநிலங்களிலும் சவுதி அரேபியா, துபாய், கத்தார், ஓமன், மஸ்கட், குவைத் போன்ற 40க்கு மேற்பட்ட நாடுகளிலும் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கையெழுத்து இயக்கத்திற்கு தொண்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை மறைக்காயர், மாநிலத் தலைவர் கமால் அப்துல் நாசர், மாநில செயல் தலைவர் உஸ்மான் கான், மாநிலச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்முயற்சிகளை எடுத்துள்ளனர்.
இந்த தலைவர்களின் ஆலோசனையின் பேரில் மாநில பொருளாளர் நம்புதாளை பாரீஸ் தலைமையில் அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதியன்று, கையெழுத்து இயக்கம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளையின் மாநில பொருளாளர் நம்புதாளை பாரிஸ் தெரிவித்தார்.
மேலும் படிக்க | பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உலக அளவில் பதிவு செய்த கஷ்மீரி பெண்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ