எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை -சீதாராம் யெச்சூரி!

அடத்தாண்டு நடைப்பெறவுள்ள பொதுத் தேர்தலில் எந்த அணியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது!

Last Updated : May 12, 2018, 04:04 PM IST
எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை -சீதாராம் யெச்சூரி! title=

அடத்தாண்டு நடைப்பெறவுள்ள பொதுத் தேர்தலில் எந்த அணியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரவிக்கையில்... "பாஜக-வை அதிகாரத்தில் இருந்து இறக்குவதுதான் நமது பிரதான குறிக்கோள், அடுத்த தேர்தலில் அதனை செய்து முடிப்போம்" என தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக ஒடிசா சென்ற சீதாராம் யெச்சூரி, நேற்று பெர்ஹாம்பூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார் பின்னர் புவனேஸ்வரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது...

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை குறித்து CPI(M) கவனமாக ஆராய்ந்து வருகிறது, வரும் 2019 பொதுத் தேர்தலில் பாஜக அரசு நிச்சயம் வீழ்த்தப்படும்.

பாஜக காட்டிவரும் முனைப்புகளை முறியடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் CPI(M) மேற்கொண்டு வருகிறது.

இந்த நாட்டில் ஏழைகள் ஏழைகளாக வாழவும், பணக்காரர்கள் பணக்காரர்களாக வாழவும் நினைப்பதே பாஜக அரசின் கொள்கை, இந்நிலையினை மாற்ற CPI(M)  முயற்சித்து வருகிறது என தெரிவித்தார்.

சந்திப்பின் போது பிஜு ஜனதா தளக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் உள்ளதா? என்று ஒரு கேள்வி எழுப்ப்ப பட்டபோது...

அதுகுறித்து எங்கள் கட்சி ஒடிசா மாநிலக் குழு முடிவெடுக்கும். மாநிலத்தில் காங்கிரசுடன் ஒரு புரிதலை சாத்தியமாக்கிக் கொள்ள வேண்டிய சூழல் ஒடிசாவில் இருப்பதை மறுப்பதற்கில்லை. 

2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை எந்த ஓர் அரசியல் அணிகளுடனோ அல்லது காங்கிரஸ் கூட்டணியுடனோ CPI(M) இணையாது எனவும் அவர் குறிப்பிட்டார்!

Trending News