வருகிறது ZEE5-ன் புதிய படைப்பு Police Diary 2.0... தவறவிடாதீர்...

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்மொழி OTT இயங்குதளமான ZEE5, ஒரு நடைமுறை வடிவமைப்பு க்ரைம் த்ரில்லர் இணைய தொடர் Police Diary 2.0-னை வெளியிடவுள்ளது.

Last Updated : Nov 5, 2019, 01:55 PM IST
வருகிறது ZEE5-ன் புதிய படைப்பு Police Diary 2.0... தவறவிடாதீர்... title=

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்மொழி OTT இயங்குதளமான ZEE5, ஒரு நடைமுறை வடிவமைப்பு க்ரைம் த்ரில்லர் இணைய தொடர் Police Diary 2.0-னை வெளியிடவுள்ளது.

வின்சென்ட் அசோகன், சந்தோஷ் பிரதாப், ஜான் கோக்கன், பூஜா ராமச்சந்திரன், அஞ்சனா ஜெயபிரகாஷ் மற்றும் பாலாஜி மோகன் ஆகியோர் நடித்துள்ள இந்த இணைய தொடர், நிஜ வாழ்க்கை சம்பவங்களிலிருந்து ஈர்க்கப்பட்ட கதை களத்தை கொண்டது. பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இத்தொடர் வரும் 2019 நவம்பர் 1 முதல் ZEE5-ல் பிரத்தியேகமாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Watch trailer here

கள்ளச்சிரிப்பு, ஆட்டோ ஷங்கர், சிகை, களவு, அலாரம், வாட்ஸ் அப் வேலக்கரி, மிட்டா, திருவம், ஃபிங்கர் டிப், போஸ்ட்மேன், இக்லூ, நிஷா போன்ற சுவாரஸ்யமான தொடர்களின் வரிசையில் தற்போது Police Diary 2.0 அசல் உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு வலுவான நூலகத்தை ZEE5-க்கு உருவாக்கியுள்ளது. கூடுதலாக, தேவி 2, நெர்கொண்ட பார்வை, விக்ரம் வேதா, கோலாமாவு கோகிலா, மெர்சல், தில்லுக்கு துட்டு 2 போன்ற தமிழ் பிளாக்பஸ்டர் படங்களும் ZEE5-ன் நூலகத்தை நிறப்பியுள்ளது.

குட்டி பத்மினி (Arpad Cine Factor) தயாரித்த, Police Diary 2.0 ஒரு அதிரடித் தொகுப்பாகும், இது தமிழகத்தில் பதிவான 52 கொடூரமான குற்றச்சம்பவங்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையும் 2 அத்தியாயங்களில் வழங்கப்படுகிறது, இது ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ZEE5 இந்தியாவின் புரோகிராமிங் ஹெட் அபர்ணா ஆச்சரேக்கர் கருத்து தெரிவிக்கையில், “ZEE5-ல், நாங்கள் எப்போதும் சக்திவாய்ந்த கதைகளைத் தேடுகிறோம், Police Diary 2.0 உடன், எங்களிடம் 52 ஈர்க்கக்கூடிய ஸ்கிரிப்ட்கள் உள்ளன. அந்த வகையில் Police Diary 2.0-யை பார்ப்பதில் பார்வையாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்துள்ளனர்.

Trending News