#VjChithraவின் "Calls" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket

சின்னத்திரை நடிகை சித்ராவின் இழப்பு பேரிழப்பு என்பது தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது. சித்ரா தொடர்பான மற்றுமொரு செய்தி வெளியாகி அவரது ரசிகர்களின் துக்கத்தை அதிகரித்திருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 26, 2021, 09:53 PM IST
  • சின்னத்திரை நடிகை சித்ரா திரைப்படத்தில் நடித்தார்
  • அவரது முதல் திரைப்படமே இறுதியானது
  • சித்ராவின் கால்ஸ் திரைப்படம் இன்று வெளியானது
#VjChithraவின் "Calls" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket title=

புதுடெல்லி: சின்னத்திரை நடிகை சித்ராவின் இழப்பு பேரிழப்பு என்பது தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது. சித்ரா தொடர்பான மற்றுமொரு செய்தி வெளியாகி அவரது ரசிகர்களின் துக்கத்தை அதிகரித்திருக்கிறது.

இன்று சித்ரா (VJ Chithra) உயிருடன் இருந்திருந்தால், இந்த நாள் கோலாகலமான நாளாக இருந்திருக்கும். தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாய், பல தொலைகாட்சித் தொடர்களில் நடித்து, கதாபாத்திரமாகவே ஒன்றிப் போகும் நடிப்புத் திறன் கொண்டவர் சித்ரா என்னும் முல்லை.

சித்ராவின் திறமைக்கு ஏற்றாற் போல திரைப்பட (cinema) வாய்ப்பும் வந்திருக்கிறது. சித்ரா நடித்த திரைப்படம் ’கால்ஸ்’.  திரைப்படத்தை இயக்குநர் சபரீஷ் இயக்கத்தில் சித்ரா நடித்த திரைப்படம் இன்று வெளியானது. திரைப்படத்தை பார்த்த அனைவரும் கனத்த இதயத்துடன், கண்ணீர் மல்க சித்ராவுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.

Also Read | #VjChithra: "Calls" திரைப்படத்தில் entryயான சித்ரா உலகில் இருந்து exit

சித்ராவின் பெற்றோர் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு திரைப்படத்தை போட்டு காண்பித்துள்ளனர். நடிகை விஜே சித்ரா இறப்பதற்கு முன் நடித்த கால்ஸ் திரைப்படத்தை பார்த்து கண்கலங்கிய சித்ராவின் பெற்றோரும், நெருங்கியவர்களும் "இப்படி ஒரு நல்ல படத்தை பார்க்காமலே சித்ரா போய்விட்டாரே' என்று வேதனை தெரிவித்துள்ளனர். 

பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கால்ஸ் திரைப்படத்தை சென்னை திரையரங்குகளில் பெண்கள் இலவசமாக பார்க்கலாம் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கால்ஸ் திரைப்படத்தை பெண்கள் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவித்திருக்கும் செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சித்ரா இல்லாத சோகம் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இலவச டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள 9176382842 என்ற தொலைபேசி எண்ணையும் படக்குழுவினர் கொடுத்துள்ளனர்.

Also Read | முல்லையாக மலர்ந்து ஹோட்டலில் மலராக வாடிய சித்ரா 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News