அவமானத்தில் ஆங்கர் மணிமேகலை.. பாஸ்போர்ட் ஆபிஸ் நடந்தது என்ன: வீடியோ வைரல்

மணிமேகலை சமீபத்தில் சென்னையில் இருக்கும் பாஸ்போர்ட் ஆபிசுக்கு சென்று அங்கு அவர் பட்ட அவமானத்தை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 27, 2024, 03:41 PM IST
  • மணிமேகலையின் பாஸ்போர்ட் ஆபிஸ் வீடியோ வைரல்.
  • இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அவமானத்தில் ஆங்கர் மணிமேகலை.. பாஸ்போர்ட் ஆபிஸ் நடந்தது என்ன: வீடியோ வைரல் title=

சன் மியூஸிக்கில் தொகுப்பாளினியாக தன் பயணத்தை துவங்கினார் மணிமேகலை. அன்றில் இருந்து இப்போது வரை இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். மணிமேகலைக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் ஒன்று உருவானது. 2008 ஆம் ஆண்டு முதல் சன் மியூஸிக்கில் தொகுப்பாளராக வலம் வந்த மணிமேகலை மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் இணைந்தார் மணிமேகலை. அதன் பின்னர் மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மணிமேகலைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் மணி மேகலை குக்கு வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். குழந்தை சிரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட, இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்த தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார் மணிமேகலை. குறிப்பாக கலகலப்பான பேச்சும், எதார்த்தமான இவரது பழகும் குணம் தான்கோடிக்கணக்கான ரசிகர்களிடையே சென்றடைந்தது என்று சொல்ல வேண்டும்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

மேலும் படிக்க | ஆண்டாள் கழுத்தில் தாலி கட்டி சிக்கிய அழகர்... பரபரப்பில் “இதயம்” சீரியல் இன்றைய எபிசோட்

இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு  நடன கலைஞரான ஹுசைனை மணிமேகலை காதல் திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்கள் இருவரும் தற்போது தனக்கென ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதில் மணிமேகலை தன்னுடைய கணவர் ஹூசேன் உடன் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

 

இந்நிலையில் மணிமேகலை சமீபத்தில் சென்னையில் இருக்கும் பாஸ்போர்ட் ஆபிசுக்கு சென்று இருக்கிறார். அப்போது பாஸ்போர்ட் ஆபிசுக்கு போகும் அவசரத்தில் காலில் இரண்டு வெவ்வேறு செருப்புகளை அனிந்து சென்றுவிட்டாராம். அதை போட்டுகொண்டு இரண்டு மணி நேரம் பாஸ்போர்ட் ஆபிசில் அவமானம் பட்டதாக வீடியோ ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவரது கணவர் ஹுஸைனும் வீட்டுக்கு திரும்பும் போது விழுந்து விழுந்து சிரிப்பது மணிமேகலை வெளியிட்டுள்ள வீடியோவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் அப்டேட்: முகத்திரையை அகற்றிய ரியா.. அதிர்ச்சி அடைந்த அம்பிகா.. அடுத்து என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News