இந்தப் பாடலை பாடியது உங்கள் விஜய் - வாரிசு முதல் சிங்கிள் அப்டேட்

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகி வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 31, 2022, 03:16 PM IST
  • வாரிசு படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்
  • படம் பொங்கலுக்கு ரிலீஸாகியிருக்கிறது
  • துணிவும் பொங்கலுக்கு ரிலீஸ்
இந்தப் பாடலை பாடியது உங்கள் விஜய் - வாரிசு முதல் சிங்கிள் அப்டேட் title=

நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை  மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள்  நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. படத்தில் பிரபு, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தில்ராஜூ படத்தை தயாரிக்கிறார்.

படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் விதமாக சமீபத்தில் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இசையமைப்பாளர் தமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி என்று குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாவதைத்தான் தமன் இவ்வாறு கூறியிருக்கிறார் என பதிவிட்டுவந்தனர். 

இதற்கிடையே வாரிசு படத்தின் புதிய போஸ்டர் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அந்தப் போஸ்டரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வாரிசு படத்தின் முதல் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்தப் பாடலானது விஜய் பாடியதாக இருக்குமெனவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென்றும் தெரிகிறது. படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

மேலும் படிக்க | தளபதியுடன் இணையும் புரட்சித் தளபதி? - அடுத்தடுத்து அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News