காதலர் தின ஸ்பெஷல்: தமிழகத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் காதல் காவியங்களின் லிஸ்ட்!

Valentine's Day 2024 Tamil Movies Re-release: காதலர் தினம் வரவுள்ளதை ஒட்டி, சில படங்கள் தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸாகின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?

Written by - Yuvashree | Last Updated : Feb 11, 2024, 08:09 PM IST
  • காதலர் தின கொண்டாட்டம்..
  • ரீ-ரிலீஸ் ஆகும் படங்கள்..
  • எனென்ன படங்கள் தெரியுமா?
காதலர் தின ஸ்பெஷல்: தமிழகத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் காதல் காவியங்களின் லிஸ்ட்! title=

Valentine's Day 2024 Tamil Movies Re-release: பிப்ரவரி மாதம் என்றாலே, அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒரு தினம், காதலர் தினம்தான். பிப்ரவரி 14ஆம் தேதி வரும் இந்த தினத்தை, ஒரு வாரம் முன்கூட்டியே பலரும் கொண்டாட ஆரம்பித்து விடுவர். இதற்கு காரணம், காதல் உலக மொழி என்பதால்தான். காதலர் தினத்தை ஒட்டி, பல காதல் படங்கள் உலகளவில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழ் நாட்டிலும் சில காதல் படங்கள் ரிலீஸாகின்றன.

96 திரைப்படம்..

96 திரைப்படம், 2018ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவ தர்ஷிணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை, சி.பிரேம் குமார் இயக்கியிருந்தார். இது, அவரது முதல் படமாகும். இந்த படம், பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து, தற்போது அப்படம் காதலர் தினத்தன்று ரீ-ரிலீஸ் ஆகிறது. 

நம்ம ஊரில், கவனம் ஈர்க்கும் வகையில் பல காதல் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில படங்களில் மகிழ்ச்சியான க்ளைமேக்சும், சில படங்களில் நம்மை அழ வைக்கும் க்ளைமேக்சும் இருக்கும். இதில், நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் படங்கள் மனதில் நிற்பதை விட, அழ வைக்கும் படங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும். அப்படி, பல இளசுகளின் மனங்களை கிழித்தெறிந்த காதல் காவியம், 96. இந்த படம், பலரது பள்ளிப்பருவ காதல் வாழ்க்கைகளை மீண்டும் விசிட் செய்ய உதவும். இப்படம், பிப்ரவரி 14ஆம் தேதியன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | ப்ளூ ஸ்டார் படத்தில் அசோக் செல்வனுக்கு பதில் நடிக்க வேண்டியது இவரா?

சீதா ராமம்:

2022 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, சீதா ராமம். இந்த படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்திருப்பார். இந்த படம் ஹிட் அடித்ததோடு இல்லாமல், பாடல்களும் பெரிதளவில் பேசப்பட்டன. இப்படம், மிருணாள் தாகூருக்கும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பெரிய மார்கெட்டை தேடித்தந்தது. இதுவும் இதயத்தை நொறுக்கும் ஒரு காதல் கதை என்பதால் ரசிகர்கள் இப்படத்தையும் கொண்டாடினர். இப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

பிரேமம்..

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான படம், பிரேமம். இப்படம், 2015ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் சாய் பல்லவி, நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா சபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இவர்கள் அனைவருமே தற்போது திரைத்துறையில் பெரிய இடத்தில் உள்ளனர். காரணம், இப்படம் ரசிகர்களை அந்த அளவிற்கு கவர்ந்தது. பிரேமம் படம், இன்றளவும் பல லட்சம் ரசிரக்களால் கொண்டாடப்படும் காதல் காவியமாக இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பிரேமம் படத்திற்கு பல பேர் ரசிகர்களாக உள்ளனர். இந்த நிலையில், காதலர் தினத்தையொட்டி இப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியானது. தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. 

மேலும் படிக்க | ராதிகா-சரத்குமார் இடையே காதல் மலர்ந்தது எப்படி? அவர்களே சொல்லும் கதை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News