Top 3 Blockbuster Tamil Movies In TN Theatres : 2024 ஆம் ஆண்டு பொருத்தவரை முதல் ஆறு மாதங்களில் பெரிதாக இந்த டாப் ஹீரோக்களின் படங்களும் வெளியாகவில்லை. சிறிய பட்ஜெட் படங்களும் வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களும் மட்டுமே வெளியாகின. அதிலும் சில படங்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தாலும், பெரிய ஹீரோக்களின் படங்கள் மட்டுமே ஹிட் அடுத்திருக்கின்றன. அதில் 3 படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
சமீபத்தில் சென்னையில் டாப் தியேட்டர்களின் உரிமையாளர்கள் அனைவரும் பேசிய நேர்காணல் வைரலாகி வருகிறது. அதில் இந்த வருடத்தில் எந்தப் படம் தங்களது தியேட்டரில் எந்த படங்கள் வசூல் பெற்றிருக்கிறது என்பதை கூறியிருக்கின்றனர்.
3.மஞ்சுமெல் பாய்ஸ்:
2024 இல் தென்னிந்திய அளவில் பெரிய வெற்றி பெற்ற மலையாள படங்களில் ஒன்று மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படத்தை சிதம்பரம் பொடுவல் இயக்கியிருந்தார். செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் வெற்றிகரமாக உள்ளது.
இதுவரை பல நல்ல படங்கள் மலையாள சினிமாவில் வந்திருந்தாலும் இந்த படம் தான் முதன் முறையாக 200 கோடியை வசூல் செய்து படமாக இருந்தது. அது மட்டுமின்றி 2024 இல் தமிழகத்தில் தியேட்டரில் பிளாக்பஸ்டர் ஆன படங்களில் இதுவும் ஒன்று. இது குறித்து தங்களின் நேர்காணலில் பேசிய தியேட்டர் உரிமையாளர்கள், இந்த படம் தங்களது தியேட்டரில் நல்ல வசூல் பெற்றதாக குறிப்பிட்டனர். தமிழகத்தில் மட்டும் மொத்தம் ரூ.50 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.
2. அமரன்:
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், அமரன். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார் இந்த படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இந்த படம் வெளியாகும் போது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அவர்களை ஏமாற்றாமல் படம் வேகமான திரைக்கதையுடன் இருந்ததால், படம் நல்ல வெற்றியை பெற்றது.
சாய் பல்லவி, உமைர் லத்தீஃப், புவன் அரோரா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம், தற்போது வரை சுமார் ரூ.340 கோடி ரூபாய் வரை உலகளவில் கலெக்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம், தமிழக தியேட்டர்களில் ப்ளாக் பஸ்டர் படமாக இருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறியிருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் இப்படம் சுமார் ரூ.166 கோடி வசூலை பெற்றதாம். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
1.தி கோட்:
விஜய் நடிப்பில் செப்டம்பர் மாதம் வெளியான படம், தி கோட் (The Greatest Of All Time). இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். விஜய்யுடன் சினேகா, மீனாட்சி செளத்ரி, பிரசாந்த், அஜ்மல், பிரபு தேவா, மைக் மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த வருடத்தில், தமிழகத்தில் அதிக வசூல் பெற்ற படங்களில் டாப்பில் இருக்கிறது, தி கோட்.
உலகளவில் ரூ. 464 கோடி ரூபாய் வரை உலகளவில் வெற்றி பெற்ற இந்த படம், தமிழகத்தில் ரூ.215 கோடி வரை கலெக்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த ஆண்டின் தியேட்டர் ப்ளாக் பஸ்டர் படங்களுள் நம்பர்.1 இடத்தில் இருக்கிறது.
மேலும் படிக்க | 2024-ல் பெரிய ஹிட் அடித்த 5 சிறிய பட்ஜெட் தமிழ் படங்கள்! லிஸ்ட் இதோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ