ஹீரோவுக்கு வசனமே இல்லை-ஆனால் படம் சூப்பர் ஹிட்! அது என்ன படம் தெரியுமா?

ஒரு தமிழ் படத்தில் ஹீரோவிற்கு டைலாக்கே கிடையாது. ஆனால், அந்த படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அது என்ன படம் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Nov 4, 2023, 10:11 AM IST
  • விக்ரம் நடித்திருந்த ஒரு படத்தில் அவருக்கு வசனமே இல்லை.
  • இந்த தகவலை அவர் தங்கலான் பட டீசர் வெளியீட்டு விழாவில் கூறியிருக்கிறார்.
  • அது என்ன படம் தெரியுமா?
ஹீரோவுக்கு வசனமே இல்லை-ஆனால் படம் சூப்பர் ஹிட்! அது என்ன படம் தெரியுமா? title=

வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களுக்கு பஞ்சமே இல்லாதது, தமிழ் சினிமா. நாயகனும் நாயகியும் பார்த்துக்கொள்ளாமலே காதல் செய்யும் படம், க்ளைமேக்ஸில் காதல் வரும் படம் என பல பாணியில் படங்கள் வந்துள்ளன. சினிமா வளர்ச்சி பெறாத காலத்தில் டைலாக்கே இல்லாமல் ஊமை படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அந்த படங்களில் யாருக்குமே வசனங்கள் இருக்காது, யார் பேசினாலும் கேட்காது. இப்போது, ஹாலிவுட் அளவிற்கு தாெழில்நுட்பங்கள் கோலிவுட்டில் வளர்ந்துள்ளன. ஆனால் இந்த காலத்திலும் கதையை மட்டும் ஹீரோவாக வைத்து ஹீரோவிற்கு டைலாக் கொடுக்காமல் நடிக்க வைத்திருந்த ஒரு படம் சூப்பர் ஹிட் அடித்தது. அது என்ன படம் தெரியுமா? 

பிதாமகன்:

தமிழ் திரையுலகிற்கு கிடைத்த முத்தான இயக்குநர்கள் ஒருவர், என புகழப்படுபவர் பாலா. ‘சேது’ படத்தை இயக்கி அறிமுகமான இவர், அடுத்து காெடுத்த கதை அனைத்துமே வலுவான கதாப்பாத்திரங்களையும் ஆழமான தாக்கத்தையும் காெண்ட படங்களாக இருந்தன. அந்த வகையில் சூர்யா, விக்ரம், லைலா, சங்கீதா உள்ளிட்டோரை நடிக்க வைத்து இவர் இயக்கியிருந்த படம் பிதாமகன். 2003ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருப்பார். சுடுகாட்டில் அடையாளம் இன்றி வெட்டியானாக இருக்கும் ஒருவன், பின்னர் சிறையில் அறிமுகமான ஒருவருடன் நண்பராக இருந்து அவரது வாழ்வில் ஒரு அங்கமாக மாறுவது போல கதை அமைக்கப்பட்டிருக்கும். 

பிதாமகன்

டைலாக்கே இல்லை..

பிதாமகன் படத்தில் ஹீரோவாக வரும் விக்ரமிற்கு, டைலாக்கே கிடையாது. இவ்வளவு ஏன், படத்தில் அவர் சிரிக்க கூட மாட்டார். மனிதர்களிடம் எப்படி பழக வேண்டும் என்றே தெரியாத அவருக்கு அனைத்தையும் கற்று தருவது சக்திதான் (சூர்யா). அவ்வப்போது சுடுகாட்டில் பாடும் பாடலை பாடுவது, சக்தி இறந்த பிறகு வில்லனிடம் “சக்தியை திருப்பி கொடு..” என்பதை தவிர விக்ரமிற்கு வேறு டைலாக்கே இல்லை. 

மேலும் படிக்க | லியோ படத்தில் நடிக்க மன்சூர் அலி கான் வாங்கிய சம்பளம் இவ்வளவு லட்சமா?

ப்ளாக் பஸ்டர் ஹிட்..!

பிதாமகன் திரைப்படம் மொத்தமாக 13 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. படம், அதை விட அதிகமாகவே கலக்ட் செய்து வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு வெற்றிதான். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆன பிறகும் இன்று வரை இது போன்ற ஒரு கதையை தமிழ் ரசிகர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

விக்ரமுக்கு ‘இந்த’ படத்திலும் டைலாக் இல்லை..

‘சியான்’ விக்ரம், தமிழ் சினிமாவின் கடினமாக உழைக்கும் நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர். இவரது படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், தனது கதாப்பாத்திரத்திற்காக அவர் போடும் உழைப்பிக்கு அனைவரும் 100க்கு 100 மார்க் போடுவர். தனது முதல் படத்திலிருந்தே விக்ரம் இந்த பெயரை கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்து விட்டார். கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கடந்த பிறகும் தற்போது வரை தனது அனைத்து படங்களிலும் அதே போன்ற கடின முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

பா.இரஞ்சித் இயக்கத்தில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள படம், தங்கலான். இந்த படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். புரட்சி மிகு கலைஞர் என கூறப்படும் பா.இரஞ்சித், தங்கலான் படம் மூலம் வரலாற்று கதை ஒன்றை எடுத்துள்ளார். இந்த படத்திலும் விக்ரமிற்கு டைலாக்கே கிடையாது. இதை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். 

மேலும் படிக்க | இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ்? இயக்குனர் இவரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News