காட்சியமைப்புடன் அழகியே பாடல் வெளியீடு

Last Updated : Mar 30, 2017, 01:55 PM IST
காட்சியமைப்புடன் அழகியே பாடல் வெளியீடு title=

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் அழகியே பாடலின் காட்சியமைப்புடன் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் வெகுவாக ஈர்க்கப்பட்ட நிலையில், 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் அழகியே பாடலின் காட்சியமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் - மணிரத்னம் கூட்டணியில் இதுவரை வெளியான அனைத்து திரைப்படங்களின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்தப் படத்தின் பாடல்களும் நிச்சயம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் இசை உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மெட்றாஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News