தமிழ் திரைப்படங்கள் பல்வேறு மையக்கருத்துக்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. காதல், சண்டை, குடும்பம், கிரைம் போன்ற பல கருத்துக்களை மையமாக கொண்டு படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வகையில் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நாளுக்கு நாள் நிகழும் அவலங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஐந்து சிறப்பான தமிழ் திரைப்படங்களை தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.
மேலும் படிக்க | எப்படி உள்ளது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்? திரை விமர்சனம்!
1) திரௌபதி :
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி மற்றும் ஷீலா நடிப்பில் 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'திரௌபதி'. இந்த படம் போலி காதலால் பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுபட்டு, அவர்களும் அவர்களது குடும்பமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை வெளியுலகிற்கு காண்பித்த படம். அதுமட்டுமல்லாது போலி திருமண பதிவு குறித்தும், பெண்களின் தைரியம் குறித்தும் இந்த படம் கூறியது. இந்த படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.
2) தெறி:
2016-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'தெறி'. பெண்களுக்கெதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் பற்றியும், அவ்வாறு குற்றங்கள் செய்பவர்களை எப்படி தண்டிக்க வேண்டும் என்பது பற்றியும் இப்படம் கூறியது. இதில் விஜய் போலீசாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.
3) அருவி :
2017-ம் ஆண்டு அருண்பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் 'அருவி'. குடும்பத்தை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு சமூகத்தில் ஏற்படும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் குறித்து இப்படம் விளக்கியது. இந்த படத்தில் நடித்த அதிதி பாலனுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது.
4) எதற்கும் துணிந்தவன் :
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. சிறு வயது குழந்தை தொடங்கி பருவ பெண்கள் வரை அவர்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை இப்படம் காட்டியது. இதில் சூர்யா பெண்களுக்கெதிரான குற்றங்களை களைய போராடுபவராக சிறப்பாக நடித்திருக்கிறார்.
5) இறைவி :
2016-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'இறைவி'. இதில் ஆண்கள் பெண்களை எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள், பெண்கள் சமூகத்தில் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை காட்டியது. இந்த படம் சமூக கருத்துக்களை எடுத்துரைத்து சிறந்த விமர்சனங்களை பெற்றது.
மேலும் படிக்க | ‘விஜய்-66’ வில்லன் இவரா!? இவரு லிஸ்ட்லயே இல்லையே!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR