சூர்யா படத்திற்கு பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பாடல் ஒன்றை எழுதியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 21, 2021, 04:53 PM IST
சூர்யா படத்திற்கு பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்! title=

பசங்க-2 படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் "எதற்கும் துணிந்தவன்".  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இது சூர்யா நடிக்கும் 40-வது படமாகும்.  இந்த படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ALSO READ வம்சி இயக்கும் விஜய் படத்தின் கதை இதுதான்! கசிந்த தகவல்!

இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.  இந்நிலையில் இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கு பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.  இந்த செய்தியினை  கேட்டதும் ரசிகர்கள் இந்த படம் 'டாக்டர்' படத்தில் உள்ள 'செல்லம்மா' பாடல் போன்று ஹிட் ஆகுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கினர். இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

siva

'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் இவர் எழுதி, பாடிய 'கும்முறு டப்பரு' பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.  இந்நிலையில் இவர் தான் நடிக்கும் ஒரு படத்திற்கும், தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் ஒரு பாடலை எழுதி வருவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் சிவகார்த்திகேயன் 'கோலமாவு கோகிலா' படத்தில் எழுதிய 'எனக்கு இப்போ கல்யாண வயசு' பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.  'எதற்கும் துணிந்தவன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இப்படம் பிப்ரவரி-4 அன்று ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ALSO READ 'ஜெய் பீம்' பட சர்ச்சை குறித்து இயக்குனர் ஞானவேல் கூறிய பதில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News