திருமண மன முறிவுக்குப் பிறகு படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கும் சமந்தா, நேற்று பிறந்தநாள் கொண்டாடினார். மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அவருக்கு, பிறந்தநாள் பரிசாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் பாசிட்டிவான விமர்சனங்களைக் கொடுத்துள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் நடித்திருக்கும் சமந்தா, படத்தில் கதிஜாவாகவே வாழ்த்திருக்கிறார்.
#Nayanthara is #Nayantharthere is no one like her . She is real,fiercely loyal and one of the most hard working people I have met #Kanmani #KaathuvakulaRenduKaadhal #AskSam https://t.co/8Crkmn8BLE
— Samantha (@Samanthaprabhu2) April 29, 2022
ரசிகர்கள் எல்லோரும் சமந்தாவை கதிஜா என்றே அழைத்து வருகின்றனர். பிறந்தநாள் மற்றும் ரிலீஸான படமும் வெற்றி என இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் சமந்தா, ASKSam என்ற ஹேஸ்டேக்கில் டிவிட்டர் கலந்துரையாடலில் பங்கேற்றார்.
I am truly thankful for all the love
The reaction to #Khatija is truly the best birthday gift . #AskSam #KaathuvakulaRenduKaadhal https://t.co/m5aChTXSO2— Samantha (@Samanthaprabhu2) April 29, 2022
மேலும் படிக்க | விஜய் சேதுபதியுடன் பாலிவுட் படத்தில் நடிக்கும் ராதிகா
ரசிகர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறியுள்ளார். காத்து வாக்குல ரெண்டு படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும், ஜாலியான ரோல் என நினைத்து நடித்ததாக கூறியுள்ளார். அதற்கேற்ப ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளதால், மிக்க மகிழ்ச்சி என டிவிட்டரில் கூறியுள்ளார். காத்து வாக்கு ரெண்டு படத்தில் தனக்கு ‘டிப்பம் டிப்பம்’ பிடித்தமான பாடல் எனக் கூறியுள்ள சமந்தா, விமர்சனங்களை புறக்கணித்து முன்னேறிச் செல்லுங்கள் எனக் கூறிய ரசிகருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
I try not to buy into the love or the hate .. stay a safe distance away from it all ♥️#AskSam https://t.co/RyLXiPjxca
— Samantha (@Samanthaprabhu2) April 29, 2022
காதல் மற்றும் வெறுப்பு என இரண்டின் மீதான பார்வைக்கு குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சமந்தா, இரண்டிலிருந்தும் மிக தொலைவில் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அன்பும், வெறுப்பும் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்றும் சமந்தா தெரிவித்துள்ளார். நாகசைதன்யாவை பிரிந்த பிறகு முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் சமந்தாவுக்கு திரையுலகில் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் அன்பும் வாழ்த்துகளையும் கடல்போல் சென்றன.
He is extremely special .. a genius @anirudhofficial #AskSam#KaathuVaakulaRenduKadhal https://t.co/6Aj1PMjYNX
— Samantha (@Samanthaprabhu2) April 29, 2022
ஒவ்வொரு வாழ்த்துக்கும் மனதார நன்றி கூறியிருக்கும் அவர், இந்த அன்பு தன்னை வியக்க வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜாவாக சமந்தா நடித்திருக்கிறார். அவரின் கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்திருந்தாலும், சமந்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளது.
மேலும் படிக்க | ஊரெல்லாம் ‘ஸ்வர்ணலதா’ பாட்டு உள்ளத்தை மீட்டுது...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR