தமிழ் சினிமாவின் பீஸ்ட் ஆகா தளபதி விஜய் திகழ்வதற்கு காரணம்!

தளபதி விஜய்யின் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

Written by - RK Spark | Last Updated : Jun 22, 2022, 10:17 AM IST
  • தளபதி விஜய்யின் 48வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
  • ஆரம்ப காலகட்டத்திலேயே நடிகர் விஜய்க்கு ரசிகர்களின் ஆதரவு மிகுதியாக இருந்து வந்தது.
  • நடிகர் என்று பார்க்காமல் ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினராகவே பாவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பீஸ்ட் ஆகா தளபதி விஜய் திகழ்வதற்கு காரணம்! title=

தளபதி விஜய் என்று அறியப்படும் நடிகர் விஜய்க்கு அவரை தலையில் வைத்து கொண்டாட உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் நிறைந்துள்ளனர்.  இன்று தளபதி விஜய்யின் 48வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.  இவர் தமிழ் திரையுலகின் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார்.  தந்தையின் மூலம் திரை துறையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இவர் தான் ஒரு திறமையான நடிகர் என்பதை நிரூபித்து காட்டியவர்.  பல்வேறு ப்ரொஜெக்ட்டுகளை கையில் எடுக்க தொடங்கினார், பல சவாலான படங்களை அசால்ட்டாக நடித்து சினிமாவின் சிகரத்தை தொட்டு பல ரசிகர்களின் இதயங்களையும் களவாடினார்.

மேலும் படிக்க | தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறிய அஜித்! முந்திக்கொண்ட சிவகார்த்திகேயன்!

ஆரம்ப காலகட்டத்திலேயே நடிகர் விஜய்க்கு ரசிகர்களின் ஆதரவு மிகுதியாக இருந்து வந்தது, அவரது படங்கள் தோல்வியடைந்தாலும் சரி, வெற்றிபெற்றாலும் சரி ஒருபோது அவருக்கு ரசிகர்களின் ஆதரவு மட்டும் குறையவில்லை என்பது நிதர்சனம்.  இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டமும், ஆதரவும் போல அவரது தலைமுறையில் இருக்கும் எந்த நடிகருக்கும் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை, அந்தளவிற்கு தளபதி விஜய்க்கு ரசிகர்களின் அன்பும், ஆதரவும் உள்ளது.  இவ்வளவு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பதற்கு விஜய் அவரது ரசிகர்களிடம் ஒரு இனிமையான பிணைப்பை உருவாக்கி வைத்திருப்பது தான்.  இவர் பலருக்கும் ஒரு சிறந்த இன்ஸபிரேஷனாக இருந்து வருகிறார், இவரை நடிகர் என்று பார்க்காமல் ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினராகவே பாவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் எப்போதுமே பல்வேறு விதமான வித்தியாசமான கதையம்சம்சம் கொண்ட படங்களையே தேர்வு செய்கிறார்.  எப்படிபட்ட படமாக இருந்தாலும் சரி அதனை துணிச்சலாக ஏற்று நடிப்பவர் நடிகர் விஜய் ஒருவர் தான்.  கமர்ஷியல் படங்கள், கலைரீதியான படங்கள் என அனைத்தையும் சவாலாக ஏற்றுக்கொண்டு நடித்து காணாது திறமையை வெளிப்படுத்துவார்.  இவரது இத்தகைய பன்முகத்திறமை தான் இன்னும் இவரை தமிழ் சினிமாவில் கோலூன்றி நிற்க செய்கிறது.  இவரை பாக்ஸ் ஆபிசில் கிங் என்றும் கூட சொல்லலாம், ஏனெனில் இவரின் சாதாரண படங்கள் கூட 50 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் முதல் வசூல் செய்து விடுகிறது.  பாக்ஸ் ஆபிசில் ஒரு பெஞ்ச்மார்க்கை செட் செய்த முதல் நாயகன் என்றால் அது நம்முடைய தளபதி விஜய் தான்.  இதுபோன்ற தொடர் வெற்றிகளும், வரவேற்புகளும், பாராட்டுகளும் தான் தளபதி விஜய்யை இன்னும் வெற்றிநாயகனாக வைத்திருக்கிறது.

மேலும் படிக்க | சாதாரண விஜய்யை 'சாம்ராட்' விஜய்யாக மாற்றிய 5 படங்கள்! # HBD Vijay

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News