#PettaParaak ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது?

ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள "பேட்ட" திரைப்படம் வெளியாகும் நாள் உறுதியானது. எப்படி?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2018, 03:11 PM IST
#PettaParaak ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது? title=

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்து திரைக்கு வர தயாராக உள்ள திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன் முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்துருக்கிறார் அனிருத். 

ஏற்கனவே இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் "பேட்ட" படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

இத்திரைப்படம் பொங்களுக்கு வெளிவரும் என தெரிவித்தபோதிலும், இதுவரை அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. அதேவேளையில் வரும் பொங்களுக்கு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள "விஸ்வாசம்" திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனையடுத்து "பேட்ட" திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுமா? அல்லது அதற்கு முன்பு வெளியாகுமா? என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. ஆனால் படக்குழு இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை.

ஆனால் "பேட்ட" திரைப்படத்தின் வெளிநாடுகளில் பிரிமியர் காட்சிகள் சனவரி 9 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியர் காட்சிகள் திரையிடப்பட்ட அடுத்த நாளே படங்கள் வெளியாகும் என்பது வழக்கம். எனவே ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள "பேட்ட" திரைப்படம் சனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்பது உறுதி. இதுக்குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கவில்லை.

Trending News