சீரிஸில் யோகிபாபு.. ஹாட்ஸ்டாரில் விரைவில் 'சட்னி - சாம்பார்'..

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், "சட்னி சாம்பார்" சீரிஸை அறிவித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2023, 05:13 PM IST
  • ஹாட்ஸ்டாரில் விரைவில் 'சட்னி - சாம்பார்'..
  • ராதா மோகன் இயக்கத்தில் சட்னி-சாம்பார்
  • இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு.
சீரிஸில் யோகிபாபு.. ஹாட்ஸ்டாரில் விரைவில் 'சட்னி - சாம்பார்'.. title=

தமிழில் தொடர்ந்து ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கி வரும், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக 'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் மங்களகரமான பூஜையுடன் ஜூலை 15 அன்று துவங்கியது.

இந்த புதிய ஒரிஜினல் சீரிஸை, ‘மொழி' முதல் காலத்தால் அழியாத பல கிளாசிக் படங்களை வழங்கிய, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். 

மேலும் படிக்க | பிரபல நடிகர் குறித்து அவதூறு பேச்சு: கம்பி எண்ணப்போகும் நட்சத்திர ஜோடி!

இயக்குநர் ராதாமோகன் கூறுகையில்.., "சட்னி - சாம்பார்' சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்" என்றார்.

நடிகர் யோகிபாபு கூறுகையில்.., "சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக "சட்னி சாம்பார்" இருக்கும்" என்றார்.

நடிகை வாணி போஜன் கூறுகையில், "டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மற்றொரு படைப்பில் இணைவது பெரும் மகிழ்ச்சி. யோகிபாபுவுடன் நடிப்பது இதுவே முதன்முறை. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ராதா மோகன் சார் இயக்கத்தில் பணிபுரியப் போகிறேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அட்டகாசமான சிரீஸாக இது இருக்கும்" என்றார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷலில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோரும் நடிக்கவுள்ளார்கள். பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர் சுந்தர்ராஜன் இந்தத் சீரிஸில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார், இதில் இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகிய மூன்று குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.

பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றிய பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று புகழ் பெற்ற அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். 

இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் பணியாற்றிய எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸுக்கான வசனங்களை எழுதியுள்ளார். ஜிஜேந்திரன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, K கதிர் கலை இயக்கம் செய்கிறார். 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

மேலும் படிக்க | குக் வித் கோமாளி அஷ்வினுக்கு விரைவில் திருமணம்..? மணப்பெண் யார் தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News