பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரபுதேவா - விஜய்!

விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு போன்ற படங்களை இயக்கி இருந்தார் பிரபு தேவா  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2021, 04:47 PM IST
பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரபுதேவா - விஜய்!  title=

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.  சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தனது படங்களில் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார் விஜய்.  இந்த ஆண்டு பொங்கல் அன்று திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகி வெற்றி நடைபோட்ட நிலையில் தற்போது 'பீஸ்ட்' படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

ALSO READ அடை மழையிலும் மாநாடு நிகழ்ச்சி : வருவாரா சிம்பு?

சென்னை, ஜார்ஜியா, டெல்லி என பல இடங்களில் இப்படத்தின் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 66-வது படம் உருவாக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.  இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு மகள் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு படபிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இயக்குனர் வம்சி, விஜய் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும், இன்னும் பணிவை மறக்கவில்லை. அவர் எப்போதும் எளிமையானவர் என்று புகழாரம் சூட்டி இருந்தார்.

இந்தப் படத்தில் வரும் இரண்டு பாடலுக்கு பிரபுதேவாவை நடன இயக்குனராக பணியாற்ற விஜய் கேட்டு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  விஜயின் நடனம் பற்றி அனைவருக்கும் தெரியும்.  இந்நிலையில் தெலுங்கில் முதன் முதலாக விஜய் என்ட்ரி ஆவதால் அந்த இரண்டு பாடல்களுக்கும் வித்தியாசமான மற்றும் ரசிகர்களை கவரக்கூடிய அளவில் நடன அசைவுகளை கம்போஸ் செய்ய பிரபுதேவாவிடம் நடிகர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

vijay

மேலும் அக்ஷய்குமாரை வைத்து பிரபுதேவா ஹிந்தியில் இயக்கிய படம் 'ரவுடி ரத்தோர்'. இந்த படத்தில் பிரபுதேவாவின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பாடலுக்கு நடிகர் விஜய் நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிப்பில் வெளியான 'போக்கிரி' படத்தில் ஒரு பாடலில் பிரபுதேவா மற்றும் விஜய் காம்போ மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் இந்த செய்தி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் இப்படத்தில் இசையமைப்பாளராக தமன் இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ மீண்டும் உலகநாயகனுடன் இணையும் நடிகை த்ரிஷா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News