மீண்டும் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதியின் படங்கள்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இரண்டு படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் உறுதியாக உள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 21, 2022, 07:35 PM IST
  • தமிழ் சினிமாவில் பிஸியான ஹீரோவாக உள்ளவர் விஜய் சேதுபதி.
  • காத்துவாக்குல 2 காதல் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
  • மாமனிதன் மே 6ம் தேதி வெளியாக உள்ளது.
மீண்டும் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதியின் படங்கள்!  title=

கதாநாயகனாக மட்டுமில்லாமல் கதையின் நாயகனாகவும் விஜய் சேதுபதி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். வில்லன், ஹீரோ, துணை கதாபாத்திரம், திருநங்கை என அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கிறார். இது சினிமாத்துறைக்கு புது முயற்சியாக இருந்தாலும், பல நேரங்களில் துரதிஸ்டவசமாக அமைந்துவிடுகிறது. ஏனெனில் விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து ஒரே நாட்கள் அல்லது ஒரே வாரத்தில் வெளியாவதால் ரசிகர்களுக்கு ஒரு சலிப்புத் தன்மை ஏற்படுகிறது.  

மேலும் படிக்க | விஜய்யின் அழைப்புக்காக காத்திருக்கும் அல்போன்ஸ் புத்திரன்!

கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் அனபெல்லா சேதுபதி, லாபம், துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் ஒரே சமயத்தில் வெளியானது.  அந்த சமயத்தில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய சமையல் நிகழ்ச்சியும்  ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.  இதனால் விஜய் சேதுபதி மீம் மெட்டீரியல் ஆக மாறினார்.  இவர் தொடர்ந்து இவ்வாறு படங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று திரைத்துறையினரே கூறும் அளவிற்கு இருந்தது. மேலும் கொரோனா சூழ்நிலை காரணமாகவும் படங்கள் தாமதமாக வெளியானது.

இந்நிலையில் மீண்டும் இதே சம்பவம் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 28-ஆம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்துவாக்குல 2 காதல் படம் வெளியாக உள்ளது.  இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் மாமனிதன் படம் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளது.  இதற்கான அதிகார்வபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இதனால் மீண்டும் அடுத்தடுத்த வாரங்களில் விஜய் சேதுபதி படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  மேலும் விக்ரம் படம் ஜீன் மாதம் வெளியாக உள்ளது.

vjs

மேலும் படிக்க | ஓடிடிக்கு வரும் புது ரூல்ஸ்: இனி நினைச்சதெல்லாம் பாக்கமுடியாதாம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News