#Thalapathy64 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

நடிகர் விஜயின் 64-வது திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Aug 24, 2019, 07:09 PM IST
#Thalapathy64 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது! title=

நடிகர் விஜயின் 64-வது திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

மெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ -விஜய் இணைந்திருக்கும் திரைப்படம் பிகில்.  விஜய்யின் 63-வது படமான இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.  இத்திரைப்படத்தின் வேலைகள் பரபரப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது விஜய்-ன் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

விஜயின் 64 வது படத்தை கார்த்திக்கின்  'கைதி' படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.  மேலும் இந்த படத்திற்கு  பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் விஜய் 64 படத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்தினை குறித்த அறிவிப்பு வெளியானது முதல் ட்விட்டரில் #Thalapathi64 எனும் ஹாஷ்டேக் ட்ரண்டாகி வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் சம்பர் 2020 வெளியீடு என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News