விஜய் மக்கள் இயக்க கூட்டத்தில் பிரியாணி கட்... புஸ்ஸி காலில் விழுந்த மன்ற நிர்வாகிகள்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் 6 மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (மே 12) நடைபெற்றது.

Written by - Sudharsan G | Last Updated : May 12, 2023, 04:03 PM IST
  • இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சைவ உணவு அளிக்கப்பட்டது.
  • ஆறு மாவட்டங்களை சேர்ந்த 50 நிர்வாகிகள் இதில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
  • கூட்டத்தில் பங்கேற்றவர்களின் செல்போன்கள் நிர்வாகிகளை வாங்கி வைத்துக்கொண்டனர்.
விஜய் மக்கள் இயக்க கூட்டத்தில் பிரியாணி கட்... புஸ்ஸி காலில் விழுந்த மன்ற நிர்வாகிகள்! title=

Vijay Makkal Iyakkam: சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் 6 மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (மே 12) நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தர்மபுரி, அரியலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மாவட்ட தலைவர், அணித் தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் என 50 பேர் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கியமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளியில் படித்து முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை மாணவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்த திட்டமிட்டு அவர்களது விவரங்களை சேகரித்து விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என ஒரு அறிவிப்பை அனுப்பி இருந்தனர்.

மேலும் படிக்க | வாரிசு vs துணிவு 100ஆவது நாள்... ஒட்டுமொத்த வசூல் நிலவரம் இதோ!

விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு அறிவித்ததை தொடர்ந்து இன்று விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 6 மாவட்டத்தில் உள்ள மாவட்ட, அணித் தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் என அனைவரையும் அழைத்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். 

அதேபோல், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், 12ஆம் வகுப்பு தேர்வில் ஒரு தொகுதியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்தது போல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற அனைவரது செல்போன்களையும் வாங்கி வைத்தனர். வரும் மே 19ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியாக உள்ளன. 

ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அடையார் ஆனந்த பவன் ஹோட்டலில் இருந்து சைவ உணவை வரவழைத்து அனைவருக்கும் பரிமாறினார்.

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான வாரிசு திரைப்படம் பெரும் வசூல் சாதனையை குவித்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் நிலையில், வரும் அக். 19ஆம் தேதி இப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மத்தியில், விஜய் அவ்வப்போது தனது மக்கள் இயக்கம் சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தளபதி விஜய்க்காக முதல் ஆளாக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News