வெளியானது ‘வாரிசு' 4th LOOK- ஸ்டைலிஷ் விஜய்யின் புகைப்படம் வைரல்!

வாரிசு படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியான நிலையில் விஜய்யின் புதிய புகைப்படம் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 23, 2022, 04:16 PM IST
  • நடிகர் விஜய் நடித்துவரும் அடுத்த படம் வாரிசு.
  • வாரிசு படத்தை இயக்குநர் வம்சி இயக்கிவருகிறார்.
  • படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21 வெளியானது.
வெளியானது ‘வாரிசு' 4th LOOK- ஸ்டைலிஷ் விஜய்யின் புகைப்படம் வைரல்! title=

நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கிவரும் வாரிசு எனும் படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் 66ஆவது படமான இதை தில் ராஜு தயாரித்துவருகிறார்.

நடிகை ரஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துவருகிறார். இதனிடையே வாரிசு படத்தின் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகின. பிறந்த நாளைக்கு முதல் நாள் மாலை பர்ஸ்ட் லுக்கும் அதைத் தொடர்ந்து பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி காலை மற்றும் மாலையில் இரண்டு போஸ்டர்கள் வெளியாகின. இந்த 3 போஸ்டர்களும்  இணையத்தில் தற்போது வைரல் ஆகிவருகின்றன.

இந்நிலையில் பிறந்த நாளின்போது வாரிசு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் புகைப்படம்  ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வைலட் நிற டிசர்ட் மற்றும் பேண்ட் உடன் ஸ்டைலிசான தோற்றத்தில் விஜய் இதில் காட்சியளிக்கிறார்.

மேலும் படிக்க | விஜய்யின் ‘வாரிசு’ போஸ்டர்ஸ் 6.01 PM, 11.44 PMக்கு வெளியானது ஏன் தெரியுமா?

 

அவருடன் இயக்குநர் வம்சி மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோரும் உள்ளனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் தற்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது. ரசிகர்கள் பலர் இதை வாரிசு நான்காவது போஸ்டர் எனக் குறிப்பிட்டு ஷேர் செய்துவருகின்றனர்.

மேலும் படிக்க | சாதாரண விஜய்யை 'சாம்ராட்' விஜய்யாக மாற்றிய 5 படங்கள்! # HBD Vijay

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News