அரசியில் கட்சி தலைவர்களை சீண்டியதா மாநாடு திரைப்படம்?

மாநாடு திரைபடம் ஒரு Time-Loop கான்செப்ட்-ஐ மையப்படுத்தி எடுத்து இருந்தாலும், ஒன்லைனாக முதலமைச்சரை கொல்ல நடக்கும் சதி திட்டத்தில் சிம்பு மாட்டிக்கொண்டு அதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பதை பற்றியே ஆகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 25, 2021, 03:41 PM IST
அரசியில் கட்சி தலைவர்களை சீண்டியதா மாநாடு திரைப்படம்? title=

நீண்ட பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான மாநாடு திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  ரசிகர்கள் மத்தியில் நல்ல பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வர தொடங்கியுள்ளது.  இதன் காரணமாக இப்படம் நல்ல வசூல் பெரும் என்று கூறப்படுகிறது.

ALSO READ Maanaadu Movie: விடிய விடிய நடந்து முடிந்த மாநாடு பஞ்சாயத்து

மாநாடு திரைபடம் ஒரு Time-Loop கான்செப்ட்-ஐ மையப்படுத்தி எடுத்து இருந்தாலும், ஒன்லைனாக முதலமைச்சரை கொல்ல நடக்கும் சதி திட்டத்தில் சிம்பு மாட்டிக்கொண்டு அதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பதை பற்றியே ஆகும்.  அரசியலை மையமாக கொண்ட கதை காலத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் சிலரையும் கலாய்த்து உள்ளார் வெங்கட் பிரபு.  நெற்றியில் விபூதி, குங்குமம் இட்ட ஒரு அரசியல் தலைவர் உங்கள் பேச்சை கேட்டுத்தான் கூட்டணி வைத்தேன் என்று பேசுகிறது.  இது எடப்பாடி பழனிசாமி அல்லது பன்னீர் செல்வத்தை குறிவைத்து எழுதியது போல் இருந்தது.

maanadu

படத்தின் இறுதி பகுதியில் வில்லன் YG மகேந்திரன், 'நான் 30 வருடங்களாக இந்த கட்சியில் உள்ளேன், ஆனால் எனக்கு முன்னுரிமை தராமல் உங்களது மகனுக்கு தருகிறீர்கள்.   கட்டவுட்டில் உங்கள் மகன் புகைப்படம் மிகப்பெரியதாகவும் எனது படம் நாளுக்கு நாள் சிறியதாகவும் மாறி வருகிறது' என்று பேசுகிறார்.  இந்த வசனம் திமுக-வை குறிவைத்து சொல்வது போல் இருந்தது.  மேலும், ஹிந்தியில் பெயர் பலகைகள் இருந்தால் அதனை அடித்து இருப்பது போலும் காட்சிகள் இருந்தது.  இதன் மூலம் ஹிந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வீதம் இதனை இயக்குனர் வெங்கட் பிரபு வைத்துள்ளார் என்றே தோன்றுகிறது.  

maanaadu

படத்தின் முக்கிய வசனமாக சிம்பு பேசும் ஒரு காட்சியும் உள்ளது.  மத கலவரங்களை தூண்டாதீர்கள், ஒரு பிரச்சனையில் முஸ்லீம் பெயர் வந்தால் அதனை மாற்ற பல காலங்கள் ஆகிறது என்றவாறு இடம் பெற்றிருந்தது.  இதன் மூலம் பிஜேபி எதிர்ப்பை பதிவு செய்வது போல் தோன்றுகிறது.  மேலும், ஆங்காங்கே இன்னும் சில அரசியல் வசனங்களும் யாரும் கவனிக்காத வகையில் இடம் பெற்றுள்ளது.

ALSO READ வந்தான் ஜெய்சான் ரிப்பீட்டு! Exclusive மாநாடு விமர்சனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News