சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய அனிரூத்: ஏ.ஆர்.ரகுமான் பக்கம் சாய்ந்த லைகா

சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தியதால் சூப்பர் ஸ்டார் படங்களில் இருந்து அனிரூத்தை கழற்றிவிட்டிருக்கிறது லைகா நிறுவனம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 6, 2022, 02:41 PM IST
சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய அனிரூத்: ஏ.ஆர்.ரகுமான் பக்கம் சாய்ந்த லைகா title=

தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக இருக்கும் அனிரூத், கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கிறார். தளபதி 67, இந்தியன் 2, ஷாருக்கானின் ஜவான் என ஜாம்பவான் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் அவர், செம பிஸியாக இருக்கிறாராம். அதேநேரத்தில் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடிக் கொண்டிருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் அனிரூத்தை, தாங்கள் தயாரிக்கும் அடுத்த 2 படங்களிலும் இசையமைப்பாளராக கமிட் செய்ய முடிவு செய்திருக்கிறது.

மேலும் படிக்க | T20 World cup: இலங்கையை பந்தாடிய இங்கிலாந்து: மேக்ஸ்வல் நம்பிக்கை வீண்.. வெளியேறிது ஆஸி,..

அந்த இரண்டு படங்களும் பெரிய பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டாரை வைத்து தயாரிக்கிறது லைகா நிறுவனம். இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அண்மையில் சந்தித்து கால்ஷீட் கன்பார்ம் செய்தனர். அதே மகிழ்ச்சியில் நேராக அனிரூத்திடம் சென்று, சூப்பர் ஸ்டாரின் அடுத்த இரண்டு படங்களுக்கும் நீங்கள் இசையமைக்க வேண்டும் என கேட்டிருக்கிறார்கள். இந்த வாய்ப்பை அவர் தவறவிடுவாரா என்ன?. கேட்டவுடன் ஓகே சொல்லிவிட்டாராம். லைகாவுக்கும் மகிழ்ச்சி. ஆனால், அடுத்தாக அனிரூத் வைத்த ஒரு டிவிஸ்டு தான் லைகாவை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இரண்டு படங்களுக்கும் 10 சி-யை சம்பளமாக கொடுத்துவிடுங்கள், சூப்பராக இசையமைத்துவிடலாம் என சொல்லியதாக கூறப்படுகிறது. இதில் ஆடிப்போன லைகா, இவ்வளவு சம்பளம் கொடுத்தால் கட்டுபடியாகாது, அதனால் ஒரு படத்தில் மட்டும் அனிரூத்தை இசையமைப்பாளராக வைத்துக் கொள்ளலாம், அதற்கும் வாய்ப்பில்லை என்றால் மொத்தமாக அவரை கழற்றிவிட்டுவிட்டு நேராக ஏ.ஆர்.ரகுமான் பக்கம் சாய்ந்துவிடலாம் என முடிவெடுத்திருக்கிறதாம். இதைப் பற்றியெல்லாம் இப்போது அனிரூத்துக்கு கவலையில்லை. ஏனென்றால், கைவசம் நிறைய பெரிய பட்ஜெட் படங்கள் இருப்பதால், கேட்ட தொகையை கொடுத்தால் இசையமைக்கிறேன் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இதனால், லைகாவின் அடுத்த படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போது மட்டுமே தெரியும், அனிரூத் இசையமைப்பாளராக இருக்கிறாரா? இல்லையா? என்பது. 

மேலும் படிக்க | வங்கதேச வீரர்கள் உணவருந்தியபோது விராட் கோலி கொடுத்த அதிர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News