First Look: பிரதமர் நரோந்திர மோடியாக நடிக்கும் விவேக்!

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை படங்கள் பாலிவுட்டில் அணிவகுத்து வந்துக்கொண்டு இருக்கின்றது!

Last Updated : Jan 8, 2019, 12:47 PM IST
First Look: பிரதமர் நரோந்திர மோடியாக நடிக்கும் விவேக்! title=

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை படங்கள் பாலிவுட்டில் அணிவகுத்து வந்துக்கொண்டு இருக்கின்றது!

அந்த வரிசையில் தற்போது பாரத பிரதமர் நரோந்திர மோடி அவர்களின் வாழ்க்கை திரைப்படம் உருவாகவுள்ளது. முன்னதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிவ சேன கட்சியின் மூத்த தலைவர் பால் தாக்ரே ஆகியோரின் வாழ்க்கை திரைப்படங்கள் உருவாகி ட்ரைலர் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது நரேந்திர மோடியின் வாழ்க்கைபடம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது

"பி.எம் நரேந்திர மோடி" என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ள இந்த பாலிவுட் திரைப்படத்தில், முன்னணி பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்தப் படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் மோடியின் உடையான  குர்தாவில் விவேக் ஓபராய் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் நேற்று இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரினை வெளியிட்டார். 23 மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லெஜன்ட் குளோபல் ஸ்டுடியோஸ் இப்படத்தினை தயாரிக்க, இயக்குநர் ஓமங் குமார் இயக்குகின்றார். 

படத்தின் முதல் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், இத்திரைப்படத்திற்கு கிடைக்கும் ஆதரவுகளை விட, விமர்சனங்கள் அதிகமாகவே உள்ளது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...

Trending News