2.0 வசூலை தூக்கி சாப்பிட்ட லியோ! வெளிநாட்டில் இப்படி ஒரு சாதனையா?

லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. வெளிநாடுகளிலும் வசூலில் மிரள வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த்தின் 2.0 வசூலை மிஞ்சியதா லியோ? வசூல் நிலவரம் என்ன என்பதை காணலாம்.  

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Nov 1, 2023, 03:10 PM IST
  • லியோ படம் வெளிநாட்டு வசூலில் இதுவரை 185 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
  • சிங்கப்பூரில் ஜெயிலர் வசூலை லியோ முறியடித்துவிட்டது.
  • லியோ இந்தியாவில் 375 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
2.0 வசூலை தூக்கி சாப்பிட்ட லியோ! வெளிநாட்டில் இப்படி ஒரு சாதனையா? title=

லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. வெளிநாடுகளிலும் வசூலில் மிரள வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த்தின் 2.0 வசூலை மிஞ்சியதா லியோ? வசூல் நிலவரம் என்ன என்பதை காணலாம்.

லியோ படம் வெளிநாட்டு வசூலில் இதுவரை 185 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூலை அடுத்து ரஜினிகாந்த்தின் ஜெயிலர் வசூலுக்கும் 2.0 வசூலுக்கும் இடையே இடம் பிடித்துவிட்டது லியோ. அதாவது தமிழ் படங்களில் வெளிநாடுகளில் அதிக வசூல் படைத்த இரண்டாவது படமாக லியோ உள்ளது. முதலிடத்தில் 198 கோடி ரூபாய் வசூலுடன் ஜெயிலர் படமும், மூன்றாவது இடத்தில் 181 கோடி ரூபாய் வசூலுடன் 2.0 படமும் இடம்பிடித்துள்ளது. 

மேலும் படிக்க | மலை போல் கோடிகளை குவித்து வைத்திருக்கும் ஐஸ்வர்யா.. கோடிகளை தாண்டும் சொத்து மதிப்பு

லியோ இந்தியாவில் 375 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 560 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 500 கோடிகளை கடந்த தமிழ் படங்களில் மூன்றாவதாக லியோ இணைந்துள்ளது. நடிகர் விஜய்க்கு லியோ வசூல் தான் அவரது படங்களில் இதுவரை வசூலான உச்சபட்ச வசூலாக உள்ளது. எப்படியும் 600 கோடி ரூபாயை லியோ வசூல் செய்யும் என்றும் லியோ தயாரிப்பு நிறுவனம் கணக்கிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கனடா மற்றும் யூரோப்பில் லியோ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நாடுகளில் அதிக வசூலான தமிழ் படமாக லியோ தான் உள்ளது. கனடாவில் இலங்கை தமிழர்கள் அதிகம் பேர் உள்ளனர். அதனால் தான் வசூலும் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஜெயிலர் வசூலை எப்படியும் லியோ முறியடித்துவிடும். ஏற்கனவே இலங்கை மற்றும் சிங்கப்பூரில் ஜெயிலர் வசூலை லியோ முறியடித்துவிட்டது.

லியோ படம் உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் 148.5 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. எப்படியும் படத்தின் முழு வசூல் நிலவரத்தை லியோ சக்சஸ் மீட்டில் தயாரிப்பாளர் லலித் குமார் சொல்ல வாய்ப்புள்ளதால் ஜெயிலர் வசூலை லியோ முந்தியதா என்பதை தெரிந்துகொள்ள காத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஜவான் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும்? வெளியானது தேதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News