சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..?

SK 24 Movie Villain : சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் கதை தற்போது ஓகே ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் வில்லனாக நடிக்க இருப்பது யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jun 26, 2024, 02:52 PM IST
  • சிவகார்த்திகேயனின் 24வது படம்
  • டான் பட இயக்குநர் இயக்குகிறார்
  • வில்லன் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அஜித் பட இயக்குநர்..! யார் தெரியுமா..? title=

SK 24 Movie Villain : தமிழ் திரையுலகில், தற்போது டாப் கதாநாயகர்களுள் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.கடந்த 14 ஆண்டுகளில் கோலிவுட் திரையுலகில் அசுர வளர்ச்சி கண்ட நடிகர்களுள் இவரும் ஒருவர்.

வளர்ச்சியும் சமீபத்திய படங்களும்..

நடிகர் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் தன் முகத்தை காட்டி அறிமுகமானார், சிவகார்த்திகேயன். பேச்சுத்திறமை, மிமிக்கிரி திறமை உள்ளிட்ட திறமைகளை கொண்ட இவரை விடாமல் பிடித்துக்கொண்டது இவர் வேலைப்பார்த்த தொலைக்காட்சி நிறுவனம். தொடர்ந்து, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தாெகுத்து வந்த இவரை பெரிய வகையில் பிரபலப்படுத்தியது ‘அது இது எது’ நிகழ்ச்சி. இதைத்தொடர்ந்து, அவருக்கு நடிகராகவும் வாய்ப்பு கிடைத்தது. 
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சிவகார்த்திகேயன், துணை நடிகராகவும் காமெடி நடிகராகவும் திரையுலகில் அறிமுமாகி, பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டார். ஆரம்பத்தில் ஆயிரங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர், இப்போது கோடிகளில் வாங்கும் அளவிற்கு பெரிய நடிகராக வளர்ந்து விட்டார். 

சிவகார்த்திகேயனின் 24வது படம்:

மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், கடைசியாக நடித்த படம் அயலான். இந்த படத்தின் ப்ரொடக்ஷன் பணிகள் 5 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்ததால் கதை பழைய கதையாகிப்போனது. படம் பெரிதாக பேசப்படாததற்கு அதுவும் ஒரு காரணம். சிவகார்த்திகேயனை பொறுத்தவரை, அவருக்கு அதிகமாக இருப்பது பெண் ரசிகர்கள்தான் என கூறப்படுகிறது. இதனாலேயே கிராமத்து கதை இருக்கும் சில கதைகளை தேர்ந்தெடுத்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில், சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் எதுவும் (டான், மாவீரன் தவிர) பெரிதாக திரையரங்குகளில் வரவேற்பை பெறவில்லை.

ஆனால், இவர் நடித்திருக்கும் ‘அமரன்’ படம் மீது பலருக்கு அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இது உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பது, அந்த எதிர்பார்ப்பிற்கான காரணமாக இருக்கிறது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனும்-ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்து பணிபுரிந்து வரும் படப்பிடிப்பும் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. இதையடுத்து தனது 24வது படத்தில் நடிக்க இருக்கிறார் சிவா. இந்த படத்தை, டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்க இருப்பதாகவும், இதில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த தேர்வு நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | அமரன் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் .. விரைவில் ரிலீஸ்!

நாயகி இவர்தான்! வில்லன் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் 24வது படத்தில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ‘அனிமல்’ படம் மூலம் பான் இந்திய நடிகையாக மாறிய ராஷ்மிகா மந்தனா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. வில்லனாக அஜித் நடித்த ‘வாலி’ படத்தை இயக்கி கோலிவுட்டிற்குள் அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

SK 24

ஏற்கனவே நடித்த படம்..

எஸ்.ஜே சூர்யாவும் சிவகார்த்திகேயனும் ஏற்கனவே டான் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லன்-ஆசிரியராக நடித்திருப்பார். காேலிவுட்டில் சமீபத்தில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்திருப்பது, எஸ்.ஜே.சூர்யாதான். அடுத்த மாதம் வெளிவர இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் கூட இவர்தான் வில்லன் என்பது குறிப்பித்தக்கது. 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News