அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: எந்த படத்தை முதலில் பார்க்கலாம்? எது நன்றாக உள்ளது?

Amaran vs Bloody Beggar vs Brother Which Movie To Watch First? 2024 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படங்களில், எந்த படத்தை முதலில் பார்க்கலாம்?   

Written by - Yuvashree | Last Updated : Nov 1, 2024, 01:02 PM IST
  • அமரன், ப்ளடி பெக்கர் மற்றும் பிரதர் படம் வெளியாகியிருக்கிறது.
  • மூன்றுமே எதிர்பார்ப்புகளை அதிகரித்தவை
  • எதை முதலில் பார்க்கலாம்?
அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: எந்த படத்தை முதலில் பார்க்கலாம்? எது நன்றாக உள்ளது?  title=

Amaran vs Bloody Beggar vs Brother Which Movie To Watch First? தீபாவளி பண்டிகை என்றாலே, புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்பது வழக்கம். அந்த வகையில், இந்த வருட தீபாவளியை முன்னிட்டு 3 படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மூன்று படங்களில் எதை முதலில் பார்க்கலாம். 

அமரன் திரைப்படம்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 31ஆம் தேதியான நேற்று திரையரங்குகளில் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 

2014ஆம் ஆண்டில் நடந்த, இந்தியாவையே உலுக்கிய புல்வாமா தாக்குதலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் இது. இந்த தாக்குதலின்போது, மக்களை காப்பாற்ற தன்னுயிர் நீத்தவர், மேஜர் முகுந்தின் வரதராஜனின் வாழ்க்கையின் கதையை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. 

அமரன் விமர்சனம்..

அமரன் திரைப்படத்திற்கு, மக்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்திருக்கின்றனர். சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருப்பதாக பலர் கூறி வருகின்றனர். மேஜர் முகுந்தாக, சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்திருப்பதாகவும், இதயத்தை கனமாக்கும் வகையில் இப்படம் இருப்பதாகவும் திரைக்கதை வேகமாக நகர்வதாகவும் சில ரசிகர்கள் விமர்சனத்தை கொடுத்துள்ளனர்.

இன்னும் சிலர், படத்தில் இன்னும் கொஞ்சம் காதல் காட்சிகளை சேர்த்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர். இருப்பினும், குடும்ப ரசிகர்களை தியேட்டர் பக்கம் ஈர்த்து வருகிறது அமரன். 

SK

ப்ளடி பெக்கர் விமர்சனம்…

வளர்ந்து வரும் நடிகர் கவினின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ப்ளடி பெக்கர். இந்த படத்தை, அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கியிருக்கிறார். கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரக்காஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இது, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்திருக்கும் முதல் படமாகும்.

Bloody Beggar

கவினின் ப்ளடி பெக்கர் திரைப்படம், டார்க் காமெடியை ரகத்தை சேர்ந்தது என்பது டிரைலரை பார்க்கும் போதே தெரிந்தது. ஆனால், அது சரியான ரசிகர்களை போய் சேருமா என்பது தெரியாமல் இருந்தது. இந்த படத்திற்கு சிலர், 5ற்கு  3.5 ரேட்டிங் கொடுத்திருக்கின்றனர். கவினின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும், முதல் பாதி நன்றாக இருந்ததாகவும் சிலர் விமர்சனங்களை தெரிவித்து இருக்கின்றனர். ஒரு சிலர், இந்த படத்தின் கதை புதிய பாணியில் இருப்பதாகவும் ஒரு முறை பார்க்கும் வகையில் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். 

பிரதர் விமர்சனம்..

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம், பிரதர். எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். குடும்பக்கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். 

Brother

மேலும் படிக்க | அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?

இந்த படம், சகோதரி-சகோதர பாசத்தை வைத்து எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விட்டுக்கொடுத்த வாழ வேண்டும் எனும் கருத்தை கூறும் இந்த திரைப்படம், காமெடியில் சொதப்புவதாகவும் சொல்ல வந்ததை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கூறியிருக்கலாம் என்றும் விமர்சனத்தை கூறி வருகின்றனர். 
எதை முதலில் பார்க்கலாம்? 

அமரன், ப்ளடி பெக்கர் மற்றும் பிரதர் படங்களில் அமரன் படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. கதை வேகமாகவும், இரண்டரை மணி நேரப்படம் போர் அடிக்காமலும் செல்வதால், இப்படத்தை முதலில் பார்க்க சொல்லி பலர் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | தீபாவளியன்று திரைக்கு வரும் 6 பெரிய படங்கள்!! முழு லிஸ்ட் இதோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News