Mari Selvaraj : தென் மாவட்டங்களில் அனைவர் மனதிலும் ஜாதி இருக்கிறது-இயக்குநர் மாரி செல்வராஜ்!

Mari Selvaraj About Caste Oppression : தென் மாவட்டத்தில் ஜாதி கொலைகளை தடுக்க மாற்றம் தேவை - இயக்குனர் மாரி செல்வராஜ் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.   

Written by - Yuvashree | Last Updated : Jun 1, 2024, 11:05 AM IST
  • தென் மாவட்டங்களில் சாதிய வெறி
  • மாரி செல்வராஜின் கருத்து
  • விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து
Mari Selvaraj : தென் மாவட்டங்களில் அனைவர் மனதிலும் ஜாதி இருக்கிறது-இயக்குநர் மாரி செல்வராஜ்! title=

Mari Selvaraj About Caste Oppression : சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையிலான படங்களை எடுத்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ். கடைசியாக, மாமன்னன் படத்தை இயக்கிய அவர், தேவர் மகன் படம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தென் மாவட்டங்களில் இருக்கும் சாதிய உணர்வு குறித்து பேசியிருக்கிறார். 

மாரி செல்வராஜ் பேட்டி:

இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குனர் மாரி செல்வராஜ் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தென் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக  அனைவர் மனதிலும் ஜாதி உள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது. எல்லோரும் சேர்ந்து ஒன்றாக சேர்ந்து நுனுக்கமாக கலைத்துறை,  அரசியல்  உள்ளிட்ட உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஒரே நாளில் மாற்ற முடியாது” என்று கூறினார். 

மேலும் படிக்க | இளையராஜா பயோபிக்கை இயக்க இருந்த மாரி செல்வராஜ்! தடுத்த இசைஞானி..காரணம் என்ன?

மேலும், “அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும். புரிதலுக்கு உள்ளாகும்.  தற்போது படங்கள் ott-யில் வெளியாவது குறித்த கேள்விக்கு பதில் கூறும் போது அனைவரும் வீட்டிலும் பூஜை அறை உள்ளது இருந்தபோதிலும் கோவிலுக்கு சென்று தான் சாமி கும்பிடுகிறார்கள் அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான் அது என்றும் மாறாது” என தெரிவித்தார். 

விஜய்யின் அரசியல் வருகை குறித்து..

நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இவரது அரசியல் வருகைக்கு பலர் வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மாரி செல்வராஜிடமும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அரசியலுக்கு அனைவரும் வரலாம்” என கூறினார். 

மாரி செல்வராஜ் இயக்கும் படம்:

பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்தை அடுத்து, அவர் இயக்கிய கர்ணன் படமும் சாதிய அடக்குமுறைகளை பற்றி பேசும் படமாகத்தான் இருந்தது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் மாமன்னன் படம் வெளியானது. இதில், நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் வெளியான சமயத்தில் மாரி செல்வராஜை சுற்றி தேவர் மகன் சர்ச்சை சூழ்ந்திருந்தாலும், ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பையே கொடுத்தனர். இந்த நிலையில், அவர் அடுத்து நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு பைசன்-காளமாடன் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் படிக்க | மாரி செல்வராஜின் உண்மையான முகம் குறித்து கூறிய பிரபல நடிகர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News