Vidaamuyarchi Movie Trailer Release : அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களுக்கு பிடித்தார் போல இருக்கிறதா, இல்லையா என்பதை இங்கு பார்ப்போம்.
டிரைலர்:
ஆக்ஷன் த்ரில்லர்:
விடாமுயற்சி திரைப்படம், ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என முன்னரே கணிக்கப்பட்டது. சொன்னது போலவே, அப்படத்தின் ட்ரைலரும் அதே போல்தான் இருக்கிறது. இந்த ட்ரைலரை வைத்து பார்க்கையில், த்ரிஷாவும் அஜித்தும் கணவன் மனைவியாக இருப்பது போலவும், இவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவது போலவும் கதை நகரும் எனக்கூறப்படுகிறது.
வில்லனாக வரும் அர்ஜுன் மற்றும் அவருக்கு இணையாக நெகடிவான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் ஆகியோருக்கும் சரியான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுத்திருக்கும் எனக்கூறப்படுகிறது. ட்ரைலரில், ஆரவ், ரம்யா உள்ளிட்ட அனைவரும் இடம் பெற்றிருக்கின்றனர்.
ரசிகர்களுக்கு பிடித்துள்ளதா?
விடாமுயற்சி படத்தின் ஒளிப்பதிவு மற்றும் அஜித்தின் வாய்ஸ் ஓவர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும், இதில் அஜித் அந்த தலைமுறை காதல் மற்றும் இந்த தலைமுறை காதல் குறித்தும் ஒரு டைலாக் பேசியிருக்கிறார். இதுவும் அனைவருக்கும் பிடித்தார் போல இருக்கிறது.
ரிலீஸ் எப்போது?
விடாமுயற்சி திரைப்படம், இந்த பொங்கல் பண்டிகையின் போதே ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், சில வெளியில் சொல்லப்படாத காரணங்களினால் இதன் ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து, வரும் பிப்ரவரி 6ஆம் தேதி, இப்படம் உலகளவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் ஆரம்பித்தது முதலே சில பிரச்சனைகளை சந்தித்து வந்தது. முதலில், படத்தின் ஒளிப்பதிவாளர் வெளிநாட்டிற்கு ஷூட்டிங்கிற்காக சென்றிருந்த இடத்தில் உயிரிழந்து விட்டார். அதன் பிறகு, படப்பிடிப்பு தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது, பின்னர் வெளியீட்டில் தாமதம், அப்படி இப்படி என சென்று ஒரு வழியாக இப்படம், அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இத்தனை தடைகளை தாண்டி இப்படம் வெற்றிபெற வேண்டியது, அந்த படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை வைத்துதான் சொல்ல முடியும்.
மேலும் படிக்க | அட, இதுதான் விடாமுயற்சி படத்தின் கதையா? ரொம்ப சிம்பிளா இருக்கே..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ