White Hair Remedy | வெள்ளை முடி பிரச்சனை இப்போது அதிகரித்துவிட்டது. காலநிலை மாற்றம், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக இளம் வயதினர் கூட நரை முடி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். நரை முடி பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். அத்துடன் நரை முடி போக்க சில வீட்டு வைத்தியங்களை செய்ய வேண்டும். இதன் மூலம், வெள்ளை முடி கருப்பாக மாற்றுவது மட்டுமல்லாமல், முடி தொடர்பான அனைத்து வகையான பிரச்சனைகளும் தீர்க்கலாம்.
வெள்ளை முடி பிரச்சனைக்கு தீர்வு :
வெள்ளை முடி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தங்கள் தலைமுடிக்கு ஆயுர்வேத எண்ணெய்களைப் பயன்படுத்த வேண்டும். இதன் பண்புகள் நரை முடி பிரச்சனையைக் குறைப்பது மட்டுமல்லாமல், முடியை வலுப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த எண்ணெய்களைப் பயன்படுத்த பலர் சந்தையில் கிடைக்கும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அவற்றின் பயன்பாடு பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பச்சை நெல்லிக்காய், கருஞ்சீரகம், செம்பருத்தி பூக்கள் மற்றும் மருதாணி இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் வெள்ளை முடியை எளிதில் கருப்பாக்கும். மேலும், முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை எளிதில் போக்கலாம். இந்த எண்ணெயைப் பயன்படுத்திய பிறகு குறைந்தது 36 மணி நேரத்திற்கு உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டாம்.
ஒரு கப் தேங்காய் எண்ணெயில் பச்சை நெல்லிக்காய், செம்பருத்தி பூக்கள், மருதாணி இலைகள் மற்றும் கருப்பு சீரகத்தை சேர்த்து நன்கு சூடாக்கவும். நன்றாக கொதிக்க விடவும். எண்ணெய் கருப்பாக மாறியதும், கேஸை அணைத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஆறியதும், ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவும். இந்த எண்ணெயை தினமும் தலைமுடியில் தடவினால், முடி கருப்பாக மாறும். இது முடி உதிர்தலையும் தடுக்கிறது.
வெள்ளை முடி வராமல் தடுக்க வழிமுறை :
1. பதற்றம் கூடாது
இன்றைய பிஸியான வாழ்க்கையில், ஒருவருக்கு அழுத்தம் இருப்பது இயல்பாகிவிட்டது. பெரும் பொறுப்புகளை சுமப்பவர்கள் இயற்கையாகவே மன அழுத்ததில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நரைமுடி வளரத் தொடங்குகிறது. இது குறித்து எடுக்கப்பட்ட பல ஆய்வுகளிலும் மன அழுத்தமே வெள்ளை முடிக்கு காரணம் என அடிக்கோடிட்டு காட்டியுள்ளன. அதனால், முடிந்தவரை, உங்கள் மனதை அமைதியாக வைத்திருங்கள். எந்த விஷயங்களுக்கு பெரிய ரியாக்ஷன் கொடுக்கவே வேண்டாம். உங்களை அமைதியாக வைத்துக் கொள்ள தியானம், யோகா செய்யுங்கள்.
2. ஆரோக்கியமற்ற உணவு வேண்டாம்
நம்மில் பெரும்பாலானோர் எண்ணெய் மிகுந்த உணவுகள், நொறுக்குத் தீனிகளை விரும்பி சாப்பிடுகிறோம். ஏனெனில் அது மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அந்த சுவைக்காக, சாப்பிடும் உணவுகள் தான் ஹார்மாற்றங்களுக்கு வழிவகுத்து நம் முடியை சேதப்படுத்துகின்றன. சிறு வயதிலேயே நரை முடியை தவிர்க்க விரும்பினால், புரதம், பயோட்டின், இரும்பு, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகளை அதிகம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. போதுமான தூக்கம்
தூக்கமின்மை உடலின் பல பாகங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் அதேநேரத்தில் நம் தலைமுடியும் அதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகள் 10 மணி நேரம் தூங்க வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 7-8 மணிநேரம் தூங்க வேண்டும். இல்லையெனில் வெள்ளை முடி தோன்றுவதைத் தடுக்க முடியாது.
4. எண்ணெய் மசாஜ்
நம் தலைமுடிக்கு உள் ஊட்டச்சத்து மற்றும் வெளிப்புற ஊட்டச்சத்து தேவை. வெள்ளை முடி தோன்றுவதைத் தடுக்க விரும்பினால், இயற்கை எண்ணெய்களைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இதற்கு ஆலிவ் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
5. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
சிகரெட், பீடி, சுருட்டு, கஞ்சா, குட்க்கா போன்ற பழக்கங்களுக்கு இளம் வயதினர் பலர் அடிமையாகி உள்ளனர். அவர்களுக்கு வெள்ளை முடி இயல்பாக வளரத் தொடங்கிவிடும். எனவே, வெள்ளை முடியை விரும்பாதவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை விரைவில் கைவிடுங்கள்.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பு குறைய இந்த மேஜிக் மசாலாவை பாலில் கலந்து குடிங்க!
மேலும் படிக்க | தினம் காலை 30 நிமிட வாக்கிங்.. உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ