Actress Sara Ali Khan Diet And Exercise For Weight Loss : பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர், சாரா அலி கான். சயிஃப் அலி கானின் மகளான இவர், 2018ல் வெளியான கேதார்நாத் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் வரும் போது, பலருக்கு இவரை அடையாளமே தெரியவில்லையாம். காரணம், இதில் நடிப்பதற்கு முன்னர் அவர் உடல் பருமனுடன் இருந்தார். இதில் நடிக்க வேண்டும் என்பதற்காக இவர் சுமார் 45 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். அதுவும், 1.5 வருடத்திலேயே! இது எப்படி என்பது குறித்து அவர் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.
சாரா அலி கானின் நேர்காணல்:
தன் உடல் எடை குறைப்பு பயணம் குறித்து பேசியிருக்கும் சாரா அலி கான், அதில் இருந்த சவால்கள் குறித்தும் பேசியிருக்கிறார். கரண் ஜோஹர், தான் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க சொல்லி தன்னிடம் கூறியதாகவும், ஆனால் அந்த கேரக்டர் ஒல்லியாக இருக்க வேண்டும் எனக்கூறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இது, தனக்கு எடையை குறைக்க உந்துதலை அளித்ததாகவும் அவர் பேசியிருக்கிறார்.
தான், உடல் பருமனுடன் இருந்த போது பலரும் தன்னை ஏளனமாக பேசியதாகும், அது தனது தன்னம்பிக்கையை பாதித்ததாகவும் பேசியிருக்கிறார். இதையடுத்து, 95 கிலோவில் இருந்து, 45 கிலோ வருவதற்கு தனக்கு உதவிய விஷயங்கள் குறித்தும் அவர் கூறியிருக்கிறார்.
சரியான டயட்:
சாரா அலிகான், தேவையற்ற உணவுகளை பேசுவதை விட்டுவிட்டு, புரதச்சத்து நிறைந்த உணவுகளை தனது உணவில் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார். வேகவைத்த முட்டை, அதிகமான காய்கறிகள், க்ரில் செய்த சிக்கன், மீன் உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்த்திருக்கிறார். மேலும், தனது உணவினை பகுதிகளாக பிரித்து சாப்பிட்ட இவர், சாப்பிடும் போது எந்தவித கவனச்சிதறலும் இன்றி முழுமையாக உணவில் மட்டும் கவனம் செலுத்தி சாப்பிட ஆரம்பித்ததாகவும் பேசியிருக்கிறார்.
உடற்பயிற்சிகள்:
சாரா அலிகான் உடல் எடையை குறைக்க, தினமும் கார்டியோ உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஸ்ட்ரெண்ட் ட்ரெயினிங், பிலாடீஸ், பாக்ஸிங் மற்றும் யோகா ஆகிய பயிற்சிகளை அவர் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இந்த பலதரப்பட்ட கார்டியோ பயிற்சிகள் அவருக்கு உடல் எடை வேகமாக குறைய உதவியிருக்கிறது.
நிலைத்தன்மையுடனான பயிற்சிகள்:
உடல் எடையை குறைப்பது என்பது எளிதான காரியம் அல்ல எனக்கூறும் சாரா அலிகான், அதற்காக நிலைத்தன்மையுடனும் விடாமுயற்சியுடனும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுகிறார். அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொண்டாலும், எந்த இலக்கை நோக்கி உடற்பயிற்சி செய்கிறோமோ அதை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார்.
பிசிஓஎஸ்:
இந்தியாவில் இருக்கும் பல இளம் பெண்கள் சந்திக்கும் பிரச்சனையாக இருக்கிறது, PCOS (Polycystic ovary syndrome). இதனால், சாரா அலிகானும் பாதிக்கப்பட்டிருக்கிறார். உடலின் ஹார்மோன் அளவுகள் மாறும் போது, அழற்சி அதிகமாக இருக்கும் போது, இன்சுலினை உடல் ஏற்றுக்கொள்ளாத போது இந்த பிரச்சனை பெண்களுக்கு வரலாம். அது மட்டுமன்றி, குடும்பத்தில் அல்லது இதற்கு முன்னர் தலைமுறையில் யாருக்கேனும் இந்த பிரச்சனை இருந்தாலும் PCOS வரும். இந்த பிரச்சனையால் அவதிப்பட்டது குறித்து பேசியிருக்கும் சாரா அலிகான், இதனால் தன்னால் வெயிட் குறைக்க முடியாமல் சிறிது சிரமப்பட்டதாகவும் பேசியிருக்கிறார். இதனால், சுய ஒழுக்கத்துடன் டயட் மற்றும் உடற்பயிற்சிகளை கடைப்பிடித்த அவர், இதனால் தனது உடலில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் பேசியிருக்கிறார்.
மொத்தத்தில் தினமும் சரியான உடற்பயிற்சியை செய்து, டயட் இருந்தாலே சரியான ரிசல்டை பார்க்க முடியும் என்கிறார் சாரா அலி கான்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?
மேலும் படிக்க | 30 வயதுக்கு மேல் எடை ஏறாமல் இருக்க ‘இதை’ சாப்பிட வேண்டும்! பாவனா சொல்லும் டிப்ஸ்..
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ