8th Pay Commission Update... 8வது ஊதிய குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல்...

8th Pay Commission Important Update: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் 8வது ஊதிய குழுவை அமைக்க மோடி அரசு இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 16, 2025, 04:29 PM IST
8th Pay Commission Update... 8வது ஊதிய குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல்...  title=

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது சம்பள ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் 8வது ஊதிய குழுவை அமைக்க மோடி அரசு இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 1.2 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் 8வது சம்பள ஆணையத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த செய்தியை உறுதிப்படுத்திய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் 8வது சம்பள கமிஷனுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதன் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு, அதாவது 2026ம் ஆண்டு சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.

7வது சம்பள கமிஷனின் காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைவதால், இது தொடர்பான அறிவிப்புக்காக அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். புதிய சம்பள குழுவை அமைப்பது குறித்து கடந்த ஒரு வருடமாக ஊழியர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் ஏராளமான சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.  

பட்ஜெட்டுக்கு முந்தைய வழக்கமான கூட்டத்தின் ஒரு பகுதியாக தொழிற்சங்கங்கள் சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தன.அங்கு சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 67 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு 8வது சம்பள கமிஷனை நிறுவ வலியுறுத்தின.

7வது சம்பள கமிஷன் 2014 பிப்ரவரியில் UPA அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் பரிந்துரைகள் 2016 ஜனவரி  மாதம் பாஜக தலைமையிலான NDA அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது செயல்படுத்தப்பட்டன. கடந்த கால நடவடிக்கைகளிம் அடிப்படையில், புதிய ஊதியக் குழு விரைவில் அமைக்கப்படும் என்றும் அதன் பதவிக்காலம் 2026 ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்றும் பரவலாக நம்பப்பட்டது. குறிப்பாக 4வது, 5வது மற்றும் 6வது ஊதியக் குழுக்கள் - 10 ஆண்டு சுழற்சியில் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | EPFO: அதிகரிக்கிறதா குறைந்தபட்ச ஓய்வூதியம்... 2025 பட்ஜெட்டில் காத்திருக்கும் குட் நியூஸ்

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அசத்தல் அப்டேட்: ஊதியக்குழுவுவை விட அதிக நன்மைகள், பட்ஜெட்டில் அறிவிப்பா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News