கார்த்தி-ன் 'தேவ்' திரைப்படத்தின் FirstLook போஸ்டர் வெளியானது!

நடிகர் கார்த்தி நடிப்பில் உறுவாகி வரும் தேவ் திரைப்படத்தின் FirstLook போஸ்டரினை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்!

Last Updated : Oct 25, 2018, 07:05 PM IST
கார்த்தி-ன் 'தேவ்' திரைப்படத்தின் FirstLook போஸ்டர் வெளியானது! title=

நடிகர் கார்த்தி நடிப்பில் உறுவாகி வரும் தேவ் திரைப்படத்தின் FirstLook போஸ்டரினை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்!

தீரன் அதிகாரம் ஒன்று, கடைகுட்டி சிங்கம் திரைப்படத்திற்கு பின்னர் கார்த்தி நடித்துவரும் திரைப்படம் 'தேவ்'. இப்படம் இவரது 17-வது திரைப்படம் ஆகும், அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இத்திரைப்படத்தினை இயக்குகிறார். 

தற்காலத்தில் இளைஞர்களின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதே இத்திரைப்படதின் கதை. ஆக்ஷன், அட்வென்ச்சர்ஸ், ரொமான்ஸ் என கலர்புல்லாக இத்திரைப்படம் உருவாக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கார்திக் ஜோடியாக ராகுல் பிரீத் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதார வம்சி என முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஹரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கின்றார். பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் போன்ற நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்து வருகின்றன. 

இந்நிலையில் இப்படத்தின் FirstLook போஸ்டரினை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். FirstLook போஸ்டர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இடம்பெற்றுள்ளதால் இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே சமயத்தில் உருவாகும் என தெரிகிறது!

Trending News