தனுஷின் 19 வருஷ ரெக்கார்டு பிரேக்கிங், கர்ணன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எத்தனை?

இதுவரை தனுஷின் 19 வருட நடிப்பு துறையில் கர்ணன் படம் தான் ரெக்கார்டு பிரேக்கிங் ஓபனிங் என்று கூறப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 11, 2021, 11:49 AM IST
தனுஷின் 19 வருஷ ரெக்கார்டு பிரேக்கிங், கர்ணன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எத்தனை? title=

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் (Dhanush), லால், ரஜிஷா விஜயன், நட்டி நடராஜன், கெளரி கிஷன் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் (Karnan) திரைப்படம். கதிர் நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு மாரி செல்வராஜின் இரண்டாவது படமாக உருவாகியுள்ளது கர்ணன்.

இந்த படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி. பெறும் வெற்றியை பெற்று வருகிறது. இதன் மூலம் கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் (Dhanush) சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கர்ணன் (Karnan) படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுவருவதாகவும் தெரிகிறது. சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியானது முதலே படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

ALSO READ | கர்ணன் FDFS திருவிழா, தியேட்டர்களில் குவிந்த தனுஷ் ரசிகர்கள்!

இந்த நிலையில் இப்படத்தின் கலெக்‌ஷன்கள் பற்றிய பெரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதுமான கர்ணனின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் (Box Office) கிராஸ் கலெக்‌ஷன் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதில், மெயின் சிட்டியில் 82 லட்சமும், செங்கல்பட்டில் 3.90 கோடியும், கோவையில் 1.55 கோடியும், நார்த் ஆற்காடு மற்றும் சவுத் ஆற்காடு 1.40 கோடியும், சேலத்தில் 69 லட்சமும், மதுரையில் 1.29 கோடியும்,  திருச்சி, தஞ்சாவூரில் 84 லட்சமும், திருநெல்வேலி, கன்னியாகுமரியில் 58 லட்சமும் என மொத்தம் 11.07 கோடி கலெக்‌ஷன் ஆகியுள்ளது. 

இதுவரை தனுஷின் 19 வருட நடிப்பு துறையில் இதுதான் ரெக்கார்டு பிரேக்கிங் ஓபனிங் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ | மனதைக் கவரும் முதல் விமர்சனத்தை பெற்றது தனுஷின் 'கர்ணன்'

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News