தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், நேற்று வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகையான கங்கனா ரனாவத், கேரளா ஸ்டோரி படம் குறித்த தனது கருத்தினை கூறியுள்ளார்.
கங்கனா ரனாவத்:
இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத், தமிழில் வெளியான தலைவி படத்தில் நடித்து பாராட்டு பெற்றவர். கங்கனா, பாலிவுட் திரையுலகில் இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் பெண்களுக்கு எதிராக எழும் வன்முறைகள் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதனால், தனது வாழ்க்கையிலும் பல சங்கடங்களை சந்திக்கிறார். இருந்தாலும், உண்மைக்கு புறம்பான விஷயங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும்படியான கருத்துகளை கூறுவதில் அவர் தவறுவதில்லை. அந்த வகையில், பெரும் சர்சைகளுக்கு உண்டான கேரளா ஸ்டோரி படம் குறித்தும் கங்கனா பேசியுள்ளார்.
“நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை..”
நடிகை கங்கனா, நேற்று ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் தி கேரளா ஸ்டோரி படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நான் இன்னும் தி கேரளா ஸ்டோரி படத்தை பார்க்கவில்லை. ஆனால், அப்படத்தை தடை செய்வதற்கு பலரும் போராடினர் என்பது எனக்கு தெரியும்” என்று கூறினார். மேலும், “இந்த படம், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரை தவிர வேறு யாரையும் தவறாக சித்தரிக்கவிலை. நீதிமன்றம் கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய முடியாது என கூறிவிட்டது. நாட்டின் மிக முக்கிய பொருப்பை கையில் வைத்துள்ள நீதிமன்றமே இந்த படத்தை பற்றி இப்படி கூறும் போது, அதை எடுத்துக்கொள்ள தானே வேண்டும்? என்று பேசினார்.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தால் வருத்தம் - இயக்குனர் மோகன் ஜி!
“நீங்களும் ஒரு தீவிரவாதி..”
தி கேரளா ஸ்டோரி படம் குறித்தும் அப்படத்தின் எதிர்ப்புகள் குறித்தும் கங்கனா நேற்று தொடர்ந்து பேசினார். அப்போது அவர், “ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது ஒரு தீவிரவாத அமைப்பு. இதை நான் சொல்லவில்லை, இந்திய அரசாங்கம் மற்றும் பிற நாடுகளும் அந்த அமைப்பை அப்படித்தான் அழைக்கின்றன. அந்த அமைப்பு, தீவிரவாத அமைப்பு இல்லை என்று நீங்கள் நினைத்தால், நீங்களும் ஒரு தீவிரவாதி என்பது தெள்ளத்தெளிவாக தெறிகிறது. கேரளா ஸ்டோரி படம் உங்களை குறிவைத்து தாக்குவது போல நீங்கள் நினைத்தால் நீங்கள் ஒரு தீவிரவாதி” என்று கூறினார்.
பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே வெளியான கேரளா ஸ்டோரி:
தி கேரளா ஸ்டோைரி திரைப்படம், பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியானது. சென்னையில் சுமார் 15 திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்த அனைத்து தியேட்டர்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதே போல ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ஃபர்ஹானா படமும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பிரதமர் ஆதரவு:
கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரைலரின் 32,000 கேரள பெண்கள் மாயமாகி, பின்பு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேருவது போல அமைக்கப்பட்டிருந்த காட்சிதான் நாடு முழுவதும் இப்படத்திற்கு எதிர்ப்புகளை கிளப்பியது. பிரதமர் நரேந்திர மோடி, நேற்று கர்நாடகாவில் நடைப்பெற்ற அரசியல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். அப்போது, தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவான கருத்துகளை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Farhana: ஃபர்ஹானா பட பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ