சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கோமாளி இந்த படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இதில் ஜெயம் ரவிக்கு அவர் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
உலக அளவில் பிரபலமாக உள்ளவர்களின் மெழுகு பல்வேறு பகுதிகளில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிரபல நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை காஜல் அகர்வால் தமது குடும்பத்துடன் சென்று தொடங்கி வைத்தார். அங்கு சிலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.
Thank you @MTsSingapore for this wonderful recognition#MadameTussaudsSG #UltimateFilmStarExperience #KajalMadameTussauds #MadameTussaudsSingapore pic.twitter.com/9cKtjK4z2Y
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) February 5, 2020
Deeply humbled and ecstatic to be honoured, standing amongst global icons. Feels like I'm seeing
myself through the eyes of an artist The resemblance is uncanny and the attention to detail is spectacular. pic.twitter.com/WmOz38QBpS— Kajal Aggarwal (@MsKajalAggarwal) February 5, 2020
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். ஹாலிவுட் முதல் பாலிவுட் வரையில் பல முன்னணி நட்சத்திரங்கள், பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் அமைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச்சிலை இன்று திறக்கப்பட்டுள்ளது.