“பீஸ்ட் பாதி..பாட்ஷா மீதி..” ஜெயிலர் பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனம்..!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் ஷோக்கேஸ் வீடியோ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று ட்ரெண்டாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Aug 3, 2023, 07:58 AM IST
  • ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் டிரைலர் நேற்று வெளியானது.
  • இந்த டிரைலர் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்று வருகிறது.
  • இருப்பினும், இந்த படத்தின் காட்சிகள் வெவ்வேறு படங்களை நினைவு படுத்துவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
“பீஸ்ட் பாதி..பாட்ஷா மீதி..” ஜெயிலர் பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனம்..! title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம், ஜெயிலர். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடத்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் (ஷோகேஸ் வீடியோ) நேற்று வெளியானது. இதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனங்கள் பலரையும் யாேசிக்க வைத்துள்ளன. 

ஜெயிலர் ஷோகேஸ் வீடியோ:

தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் படங்களின் ட்ரைலர் மற்றும் டீசர்கள், ஆங்கிலத்தில் உள்ள வெவ்வேறு வார்த்தைகளால் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், வரும் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் ஷோகேஸ் வீடியோ நேற்று மாலை 6 மணியளவில் வெளியானது. இதில், ரஜினிகாந்திற்கு ஏதோ வியாதி இருப்பது போலவும் சில சமயங்களில் அவர் பூனையாகவும் சில சமயங்களில் அவர் புலியாகவும் இருப்பார் என்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியான வெளியான ஒரு மணி நேரத்திலேயே பல லட்சம் பேர் இதை கண்டுகளித்தனர். தற்போது ஜெயிலர் ஷோகேஸ், 7.2 மில்லியன் வியூஸ்களை கடந்து யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 

மேலும் படிக்க | Jailer Showcase: காவாலாவுக்கு மட்டும் தான் தமன்னாவா... ஒளிச்சுவைக்கிறாரா நெல்சன்?

டார்க் ஹியூமர்-நெல்சன் டச்..!

தமிழ் திரையுலகில் உள்ள வித்தியாசமான இயக்குநர்களுள் ஒருவர் நெல்சன் திலீப்குமார். இதுவரை 4 படங்களே இயக்கியிருந்தாலும் இவருக்கென்று தனியாக பெரிய ரசிகர் கூட்டமே சேர்ந்து விட்டது. கோலமாவு கோகிலா படம் முதல் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் வரை அனைத்திலும் மாறாமல் இருந்த ஒரே விஷயம், டார்க் ஹியூமர். இதையே இவர் ஜெயிலர் படத்திலும் ஃபாலோ செய்திருக்கிறார். நேற்று வெளியாகியிருந்த வீடியோவில் ரஜினி ஒரு பெரிய வாளை எடுத்து பலரை சரமாறியாக குத்தி கிழிப்பது பாேலவும் யாரைப்பார்த்தும் பயப்படாமல் ரஜினி முன்னேறி செல்வது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இவை அனைத்தும் நெல்சனின் முந்தைய படங்களை தங்களுக்கு நினைவூட்டுவதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 

ரசிகர்களின் விமர்சனம்..

ஜெயிலர் படத்தின் புதிய வீடியோ வெளியானதில் இருந்து ரசிகர்கள் பலரும் அந்த வீடியோ குறித்த தங்கள் கருத்தினை தெரிவித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்திருந்த ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஒரு போலீஸ்காரர் மகனாக இருப்பது போல காட்சி படுத்தப்பட்டிருக்கும். அதே போல தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினிக்கும் ஒரு மகன் இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஒரு வியாதி இருப்பதாக கூறப்படுகிறது, இது பீஸ்ட் படத்தில் விஜய்க்கு இருந்த அதே வியாதியா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். மேலும் வீடியோவில் ரஜினி ஒரு வீட்டில் தங்கியிருப்பது பாேல காண்பிக்கப்பட்டிருக்கும். இந்த வீடி டாக்டர் படத்தில் இடம் பெற்றிருந்த வீடு பாேல இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 

வில்லன் யார்..? 

தமிழ் படங்களில் சைட் வில்லனாகவும் மெயின் வில்லன்களில் கையாளாகவும் காண்பிக்கப்பட்டவர், விநாயகம். இவர் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் வீடியோவிலும் இவர் வில்லனாக வருவது போல காட்சி படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதில் அவர் யாரிடமோ தொலைபேசியில் பேசுகிறார். அதனால், அவர்தான் மெயின் வில்லனாக இருக்க முடியும் என ரசிகர்கள் கருதுகின்றனர். விக்ரம் படத்தில் இதே போல விஜய் சேதுபதிதான் மெயின் வில்லனாக காட்சி படுத்தப்பட்டிருப்பார். ஆனால் அவரே ஒரு தாெலைபேசி அழைப்பு வந்தால் நடுங்குவார். அவர் யார் என்பது இறுதியில்தான் தெரியும். தற்போது அதே போன்ற காட்சிதான் ஜெயிலர் படத்திலும் இடம் பெற்றுள்ளதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். 

பாட்ஷா படத்திலும் இதே போன்ற காட்சியா..?

நேற்று வெளியாகியிருந்த ஜெயிலர் பட வீடியோவில் ரஜினி பல ஆண்களின் புடை சூழ நடந்து வருவார். இதே போல பாட்ஷா படத்திலும் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். இதைப்பார்த்த ரசிகர்கள், “என்னப்பா நெல்சா..எல்லா படங்களையும் கலந்து ஒரு படமா எடுத்திருக்க..” என்று கேட்கின்றனர். 

மேலும் படிக்க | உலகளவில் ட்ரெண்டாகும் ஒரே தமிழ் படம்..! ஒடிடியில் ‘மாமன்னன்’ படைத்த புதிய சாதனை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News