ஜீவா - சுந்தர்.சி படத்தில் இணைந்த விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி

சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியும் இணைந்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 26, 2022, 11:33 AM IST
  • சுந்தர் சியின் புதிய படம்
  • ஊட்டியில் சூட்டிங் நடைபெறுகிறது
  • பிரபல தொகுப்பாளினி டிடி இணைந்துள்ளார்
ஜீவா - சுந்தர்.சி படத்தில் இணைந்த விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி title=

அரண்மனை படத்தைத் தொடர்ந்து குடும்ப படம் ஒன்றை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இந்தப் படத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாகவும், ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன் மற்றும் மாளவிகா சர்மா, அம்ரிதா நாயர் ஆகியோர் ஹீரோயின்களாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரங்களில் யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க | பவன் கல்யாணின் ருத்ரதாண்டவம்! பீம்லா நாயக் திரைவிமர்சனம்!

இந்த குழுவில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினி. ஊட்டியில் நடைபெறும் சூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள அவர், சுந்தர் சி, நடிகர்கள் ஜெய் மற்றும் ஜீவா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பேம்லி என்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில் நகைச்சுவை, காதல், குழப்பம் என எல்லாமே இருக்கும் எனக் கூறியுள்ள டிடி, சகோதரி ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஊட்டியிலேயே படமாக்கப்படுகின்றன. குஷ்புவின் அவ்னி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. டிடி பதிவிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், குஷ்பூ மேம் நீங்க எப்போ ஜாயின் பண்ணப்போறீங்க? என கேட்டிருப்பதால், அவரும் இந்தப் படத்தில் நடிக்கலாம் என தெரிகிறது. ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடை விருந்தாக திரைக்கு கொண்டு வர இயக்குநர் சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார். மேலும், சுந்தர் சியின் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இருவரின் கூட்டணி சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளது. 

மேலும் படிக்க | விக்ரம் வேதா ஹிந்தியில் பர்ஸ்ட் லுக் வெளியீடு - ரசிகர்களின் ரியாக்ஷன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News